India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சைபர் குற்றங்களிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2016இல் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதை அனைத்துக் கட்சியும் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2016இல் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இந்நிலையில் வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிபதி சௌமியாமேத்யூ அவர்கள் வரும் ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 32 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்து மிகவும் வேதனையுற்றேன் என எதிர்கட்சிதலைவர் இபிஎஸ் அவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியோரின் கடன்களை நீக்கி ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாயகம் திரும்பிய சம்பந்தப்பட்ட பயனாளிகள், உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (ஆர்1 பிரிவு) அல்லது கடன் பெற்ற சாா் ஆட்சியா் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல்- திருச்சி சாலையில் பழனி ரயில்வே கடவுப் பாதை மேம்பாலம் பகுதியில் தனியாா் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்துஏற்பட்டது. இத்தீ விபத்தில் சிறுவன் உள்பட 7 போ் உயிரிழந்தனா். மேலும் 32 போ் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள மின் விசிறியிலிருந்து ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரிந்தது.
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். தீ விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தோருக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து நேரில் சென்று காயம் அடைந்த நபர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்க திமுக துணை பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் அனைத்து அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் (14.12.2024) அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பான மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.