Dindigul

News December 15, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் அறிவுரை 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக, மழைக்காலங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, குடை பிடித்தபடி வாகனம் ஒட்டி செல்ல வேண்டாம். நமது அலட்சியம் பெரும் விபத்தை ஏற்படுத்தும். எதிரேவரும் வாகனங்களுக்கும் விபத்து ஏற்படக்கூடும்” என்ற புகட்டடம் மூலமாக திண்டுக்கல் மக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தியுள்ளனர். 

News December 14, 2024

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

திண்டுக்கல்லில் (14.12.2024) இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News December 14, 2024

மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு

image

திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி இரவு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 41 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த தீ விபத்து தொடர்பாக சீலப்பாடி விஏஓ அளித்த புகாரில் இன்று திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News December 14, 2024

ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் தின விழாவில் 2025 ஆண்டிற்கான ஔவையார் விருது பெற திண்டுக்கல் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (https://awards.tn.gov.in) இல் விண்ணப்பித்து கருத்துருவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் (31.12.2024) மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். 

News December 14, 2024

இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவு: அமைச்சர் சக்கரபாணி இரங்கல்

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது எனவும், அன்னாரைப் வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் அர. சக்கரபாணி பதிவிட்டுள்ளார்.

News December 14, 2024

ஓடும் இரயிலில் அபாய சங்கிலியை இழுத்ததால் பரபரப்பு

image

கான்பூரில் இருந்து மதுரைக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் இரயிலின் 4ஆவது பெட்டியில் பயணி ஒருவர் தூக்க களைப்பில் அபாய சங்கலியை இழுத்ததால் ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு பகுதியில் இரயில் நிறுத்தப்பட்டது. சோதனை செய்யப்பட்டதில் தூக்க கலக்கத்தில் அபாய சங்கிலியை இழுத்ததாக கூறப்பட்ட நிலையில் 5 நிமிடம் கழித்து புறப்பட்டது.

News December 14, 2024

கொடைக்கானல் அருகே கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கூக்கால் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வந்த ஷோபா என்ற பெண் மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார். தொடர்ந்து நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவரின் இறப்பு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News December 14, 2024

திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று எக்காரணத்தை முன்னிட்டும் வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் இயங்க கூடாது. மேலும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பணிகள் முடிக்கப்பட்டு, திங்கள் கிழமை(16.12.24) அன்று பள்ளிகள் மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அறிவுறுத்தியுள்ளார்.

News December 13, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

இன்று வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விவரம். இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர்,பழனி,ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் காவல்துறையினர் இரவு ரோந்து வருகின்றனர். தங்கள் பகுதியில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 13, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.திண்டுக்கல் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அனைத்து கோயில்களில் நடைபெற்றது.
2.பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபம்
3.தீ விபத்து: அமைச்சர் மா. சுப்பிரமணி பேட்டி
4.அமெரிக்க அதிபர் போல் ஆக நினைக்கிறார் பிரதமர் – வைகோ
5.தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

error: Content is protected !!