India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், பழனியில் மார்கழி மாதம் முழுவதும் மலைக் கோயிலுக்கு அதிகாலை 3 மணி முதலே படிப் பாதையில் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. தைப் பொங்கல் விழா நாள்களிலும்அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இன்று முதல் தொடர்ந்து 32 நாள்களுக்கு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும் எனவும், அதிகாலை 4.30 மணி முதல் சாமி தரிசனம் செய்யலாம்.
சமீபகாலமாக தொடர்ச்சியாக திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களை மிரட்டும் வகையில் வெடிச்சத்தம் கேட்கிறது. இதேபோல் இன்று காலை 11.21 மணிக்கு நடந்த பயங்கர வெடிச்சத்தம் குஜிலியம்பாறை, வேடசந்தூர், வடமதுரை, நத்தம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வெடிச்சத்தம் மீண்டும் கேட்டது.
வத்தலக்குண்டுவில் உள்ள பஸ்நிலையம், காளியம்மன் கோயில் உள்பட பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதில் ‘வெளியேறு… வெளியேறு… எடப்பாடியே வெளியேறு… பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வெளியேறு…’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் வத்தலக்குண்டு பகுதி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணை நிரம்பிய நிலையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். இதில் பாதுகாப்பு கருதி 55 அடி நீர் தேக்கப்படும். தற்போது பெய்த மழையால் அணை நிரம்பியதால், வினாடிக்கு 665 கன அடி வரத்து வெளியேறுகிறது. வத்தலக்குண்டு, உச்சம்பட்டி, சிவஞானபுரம் மஞ்சளாற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திண்டுக்கல்லில் (15.12.2024) இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதசார்பற்று இருந்தால்தான் ஒற்றுமை ஓங்கும். பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பின்பற்றி வந்த நிலையை தொடர முடியாமல் போய் விடும். ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, உகாண்டாவின் இடி அமீன் ஆகியோரது மனநிலை நமது பிரதமர் மோடியின் உள்ளத்தில் உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்கவும்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வேடசந்தூர் அருகே தர்மபுரியில் இருந்து பழனிக்கு சாமி தரிசனம் செய்ய டாக்டர் தம்பதியினர் பழனிசாமி – கிருத்திகா காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாவேந்தர் என்பவர் ஓட்டி வந்தார். கார் வேடசந்தூர் அருகே வந்தபோது கூகுள் மேப் காட்டிய மண்பாதையில் சென்ற கார் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த வேடசந்தூர் தீயணைப்புத்துறையினர் காரை மீட்டனர்.
உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு, வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு தகுதியானவா்கள் வருகிற 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரரின் கருத்துரு (தமிழ், ஆங்கிலத்தில்), 2 புகைப்படத்துடன் புத்தகவடிவில் அனுப்ப வேண்டும். இரண்டு (அசல்-1, நகல்-1) கருத்துருக்கள் என்ற வகையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
பழனியை அடுத்த பாப்பம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன்(70), அவரது மகள் பார்வதி(45). நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு-வை மாரியப்பன் அவதூறாக பேசியுள்ளார். அதனால் ஏற்பட்ட தகராறில் சின்னப் பொண்ணு, மருமகள் சுதா, மகன் மாசிலாமணி ஆகிய மூவரும் மாரியப்பனைத் தாக்கினா். மாசிலாமணி, மாரியப்பனை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.