India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (கணினியில் Pen drive பயன்படுத்தும்போது மிக கவனமாக பயன்படுத்தவும்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மூலச்சத்திரம் பகுதியில் கார் குடோனில் சட்டவிரோதமாக வெடி மருந்து பதுக்கி வைத்திருந்த நிலையில், தீப்பிடித்து வெடித்ததில் கார்கள் மட்டும் இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார், முஸ்தாக்(25) முகமது முபீத்(29) புதுச்சத்திரத்தை சேர்ந்த ரிச்சர்டுரூபன்(32), கார்த்திக்(27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல் முதல் காரைக்குடி வரையிலான புதிய ரயில் வழித்தடம் அமைக்க கோரியும் மற்றும் இதர திண்டுக்கல் மாவட்ட ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் சந்தித்து கடிதத்தை வழங்கினார்.
தாடிக்கொம்பு அருகே மோகன் என்பவரிடம் உதயா(எ)உதயகுமார் பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, மோகன் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை செய்து பறித்தது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் மேல் 10 மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவரின் நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையின் சார்பில் 18 மாவட்டங்களில் உயர்மட்ட பாலம் கட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் குடகனாறு ஆற்றில் மணலூர் ஊராட்சியில் சித்தரேவு-தாண்டிக்குடி சாலையில் ரூ.8 கோடியே 52 லட்சத்து 69ஆகியரம் செலவில் ஒரு பாலம் அமைக்கப்படவுள்ளது.
பழநி அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியதாக புகார் வந்த நிலையில், நேற்று செந்தில்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி துறையினர் 20 பேர் நுழைந்து பல மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
ஒட்டன்சத்திரம், தாராபுரம் ரோட்டில் உள்ள குழந்தைவேல் முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க், அவர்களது வீடுகளில் நேற்று காலை 10 மணி முதல் மதுரையில் இருந்து வந்த வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கடை, அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் முகாம் நாளை(20.12.24) நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்துத் துறை முதன்மை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பண்ணைக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளர்ப்பு, விவசாயக் கடன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளிக்கலாம்.
ஒட்டன்சந்திரம் அருகே மூலச்சத்திரத்தில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 3 கார்கள், 5 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தன. முத்தலிப் என்பவர் கடை வாடகைக்கு எடுத்து ஜெலட்டின் குச்சிகளை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் திடீரென்று வெடித்து சிதறிது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (20.12.2024) நடக்கிறது. https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம். இதில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்து முடித்தர்வகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 94990-55924 என்ற எண்ணை அழைக்கவும்.
Sorry, no posts matched your criteria.