Dindigul

News December 21, 2024

வேலை வாங்கித் தருவதாக 10 சவரன் நகை மோசடி

image

திண்டுக்கல், வேடசந்தூரைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், அவா் பணிபுரியும் தனியாா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10 சவரன் நகையை மோசடி செய்ததாக திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த ஏ.ரம்ஷான் மற்றும் அவரது மகன் இப்ராம்ஷா ஆகியோர் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். 

News December 21, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சிறப்பு இரயில்

image

தூத்துக்குடி – பெங்களூர் இடையே நாளை கிறிஸ்துமஸ் சிறப்பு இரயில் இயக்கப்படுகின்றது. தூத்துக்குடி – எம்.வி.டி பெங்களூர் வண்டி எண்.07362 நாளை மதியம் 01-00 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு எம்.வி.டி. பெங்களூர் சென்றடையும். இந்த இரயில் கோவில்பட்டி மற்றும் சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் போன்ற இரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது.

News December 21, 2024

பழனி: நிதி நிறுவனர் வீட்டில் ஐ.டி. சோதனை நிறைவு

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் என்பவரது வீட்டில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள்,  கணக்கில் வராத நகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

News December 21, 2024

திண்டுக்கல்லில் மேலும் ஒருவருக்கு உன்னிக்காய்ச்சல்

image

திண்டுக்கல், குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (61) உன்னிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டிச.10இல் திண்டுக்கல் GHஇல் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார். அதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒருவரும் இறந்தார். இந்நிலையில் தோட்டனூத்து பகுதியைச் சேர்ந்த சத்தியமேரி (47) உடல்நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் GHஇல் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நேற்று உன்னிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

News December 20, 2024

திண்டுக்கல் இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

திண்டுக்கல்லில் இன்று வெள்ளிக்கிழமை 20-12-2024 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News December 20, 2024

இரவு நேர வாகன ஓட்டுநர்களின் கவனத்திற்கு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (இரவு நேரங்களில் பெரும்பாலான விபத்துக்கள் தூக்கமின்மை காரணமாகவே நடைபெறுகின்றன. எனவே, வாகன ஓட்டுநர்கள் முறையான ஓய்வு எடுத்து பின் வாகனங்களை ஓட்டிச்செல்லுங்கள்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 20, 2024

திண்டுக்கல்லில் இன்று மின்தடை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று, ரெட்டியார்சத்திரம், செம்மடிப்பட்டி, பழங்கானூத்து, பாளையம், கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி, எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டானாம்பட்டி, கன்னிவாடி, மாநகர், நீலமலைக்கோட்டை, தருமாய்த்துபட்டி, லிங்கவாடி, வெம்பாறை ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 20, 2024

அமித்ஷா படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த காங்கிரசார்

image

அம்பேத்கரை தவறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷா போன்று வேடமிட்டிருந்தவருக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News December 20, 2024

மத்திய அமைச்சரிடம் மனு அளித்த திண்டுக்கல் எம்.பி

image

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி அவர்களை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் நேரில் சந்தித்து விவசாய விலை பொருட்கள் கொள்முதல் செய்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விநியோகித்தல், கிடங்கு பொருள்களின் கடன் திறமை பெருக்குதல் போன்றவற்றிற்காக மனு அளித்தார்.

News December 20, 2024

திண்டுக்கல் இன்றைய இரவு நேரம் வந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!