Dharmapuri

News September 1, 2024

தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி வழிகாட்டு நெறிமுறைகள்

image

தர்மபுரி மாவட்டம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு; களிமண்ணால் செய்யப்பட்டது, தெர்மாகோல் கலவையற்றதுமான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிலைகள் இருக்க வேண்டும். சிலைகளில் உலர்ந்த மலர் கூறுகள் வைக்கோல் இயற்கை பயன்படுத்தலாம். இந்த நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

தருமபுரியில் மாவட்ட தடகளப்போட்டி தொடக்கம்

image

தருமபுரி மாவட்ட தடகள விளையாட்டு சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட தடகள போட்டிகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தடகள சங்கத்தினர் கொடியசைத்து போட்டியினை துவங்கி வைத்தனர். இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவிகள் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.

News September 1, 2024

தருமபுரியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

image

தருமபுரி மாவட்ட நிா்வாகம், தகடூா்ப் புத்தகப் பேரவை சாா்பில், 2024 ஆம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழா அக்டோபா் 4-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது. கல்லூரி, பள்ளிக்கல்வித் துறை சாா்பாக ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும், கல்லூரியிலும் கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், விவாத மேடை, பட்டிமன்றம் போன்ற போட்டிகளை நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தெடுத்த ஜே.சி.ஐ

image

ஜீனியர் சேம்பர் இன்டர்நேசனல் இந்தியா தொண்டு நிறுவனத்தின் தருமபுரி மாவட்ட கிளையின் சார்பில் தருமபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தெடுத்து ஒழுக்கம் சார்ந்த கல்வி, பேச்சு பயிற்சி மற்றும் தலைமை பண்புடன் கூடிய கல்வி திறன் பயிற்சி வழங்குதல், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது குறித்து மாவட்ட ஜே.சி.ஐ தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமையில் கலெக்டர் சாந்தி ஆலோசனை மேற்கொண்டார்.

News August 31, 2024

தருமபுரி காவல்துறை எச்சரிக்கை

image

யூடூப்பில் வீடியோக்களை லைக் மற்றும் ஷேர் செய்தால் பணம் கிடைக்கும் என டெலெக்ராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் வரும் குறுஞ்செய்திகளையோ அல்லது அழைப்புகளையோ நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இதனால் பண இழப்பு ஏற்படலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ச.சோ.மகேஸ்வரன் இன்று (31.08.2024) தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், 1930 என்ற எண்ணை அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News August 31, 2024

தகடூர் புத்தக திருவிழாவில் பரிசு போட்டிகள்

image

தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து 2024ஆம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழாவினை அக்டோபர் 4 முதல் 13ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு அரசுப்பள்ளி (ம) கல்லூரிகளிலும் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், பட்டிமன்றம் போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வெற்றிபெறும் மாணவர்களுக்கு புத்தக திருவிழாவில் பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 31, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், பூதநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று (31.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், ரவிசந்திரன் ஆகியோர் இருந்தனர்.

News August 31, 2024

உரத்தை மாற்றி பயன்படுத்த வேளாண் அதிகாரி தகவல்

image

தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளதால் அதிக மகசூல் கிடைக்கும் என்றும் மாவட்டத்தில் 425 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

தருமபுரியில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி பெற்ற இடங்கள்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோர் விநாயகர் சிலைகளை கரைக்ககூடிய இடங்களாக வாணியாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை, சேகர்குளி ஹல்லா அணை, தென்பெண்ணையாறு, ஓகேனக்கல் (காவிரி) ஆறு போன்ற இடங்களில் மட்டும் அரசின் வழிகாட்டுதலின்படி கரைக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News August 30, 2024

ஒகேனக்கல்லில் பனைவிதைகள் நடும் பணி ஆலோசனை

image

காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரிக்கரையில் வருகின்ற 08.09.2024 அன்று நடைபெறுவதை யொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!