India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று (ஆக.22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. விருப்பமுள்ள ஆண், பெண் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். SHARE பண்ணுங்க!

தர்மபுரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. காரிமங்கலம் (ஸ்ரீ துளசியம்மாள் திருமண மண்டபம்), காரிமங்கலம் (VPRC கட்டிடம் அனுமந்தபுரம்), கடகத்தூர் (விநாயகா திருமண மண்டபம்), நல்லம்பள்ளி (மானியதானஅள்ளி சமுதாய கூடம்), மொரப்பூர் (சமூகக்கூடம் ஈச்சம்பாடி), பாலக்கோடு (VPRC கட்டிடம், புலிக்கரை) ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 21 ) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக R. குணவர்மன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை ஷேர் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சாதனைப் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை தினத்தில் வழங்கப்படும் இவ்விருதிற்கு, நவம்பர் 30, 2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலரை 04342-233088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து நேற்று (ஆகஸ்ட் 20) 1,00,000 கன அடியாக இருந்தது. அது படிப்படியாக குறைந்து இன்று (ஆகஸ்ட் 21) காலை 8 மணி நிலவரப்படி 30,000 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்தபோதிலும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் நான்காவது நாளாக தடை நீடிக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) தர்மபுரி மாவட்ட அலுவகத்தை (04342-260042) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க*

LIC நிறுவனம் உதவி நிர்வாக அலுவலர்(பொது), உதவி பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர்(Chartered Accountant, Company Secretary, Actuarial, Insurance Specialists, Legal) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 850 காலிப்பணியிடங்கள் உள்ளது. இளங்கலை/ பொறியியல் பட்டம் பெற்ற 21-30 வயதிற்குட்பட்டோர் இந்த <

LIC AAO வேலைக்கு முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு உண்டு. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.