India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, உயர்கல்வி வழிகாட்டலுக்கான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நாளை (மே 9) காலை 9.30 மணி அளவில் தருமபுரி – பென்னாகரம் சாலையில் உள்ள, விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலை அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்பெறுமாறு தருமபுரி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்க நிலையில் நேற்று(மே 7) மாலை வெயில் தாக்கம் மிக குறைந்த அளவே காணப்பட்டது. இந்நிலையில் இன்று(8.5.2024) அதிகாலை 4 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் மேகங்கள் திரண்டு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியில் பொதுமக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளின், மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிநாட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 30 – 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி தருமபுரி உட்பட 12 மாவட்டங்களில் இன்று(மே 8) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரூர் அடுத்த சின்ன குப்பம் அருகே இன்று (07/05/2024) மாலை அரூரிலிருந்து கோபிநாதம்பட்டி நோக்கி வந்த வாலிபர் வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு கோபிநாதம்பட்டி காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,“+2 முடித்து மேற்படிப்பு பயில்வோர்களை பொறியியல், நர்சிங், கலை (ம) அறிவியல், பாலிடெக்னிக் ஆகிய படிப்புகளில் தனியார் கல்லூரிகளில் நேரடியாக சேர்த்துவிடுகிறோம். கட்டணம் அனைத்தும் இலவசம், விடுதி கட்டணம் செலுத்தினால் போதும் என ஏமாற்றும் நோக்கில் ஆசை வார்த்தைகளை கூறும் இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்
தர்மபுரி அருகே மொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சாந்தி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கழிவறை செல்வதற்காக வெளியே வந்தபோது 2 நபர்கள் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து 47 ஆயிரம் பணம் மற்றும் சாந்தியின் கழுத்திலிருந்த 7.5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர் . இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார்
விசாரிக்கின்றனர்.
தருமபுரி வட்டம் குண்டலபட்டி அருகே கிணற்றில் வேலை செய்யும்போது தவறி விழுந்து இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக நேற்று(மே 6) மாலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த மாரியப்பன் என்பவரை இறந்த நிலையிலும், மற்றொரு நபரை காயங்களுடனும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று தருமபுரி உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி அடுத்து இண்டூர் அருகே நத்தஅள்ளி கிராமத்தில் இன்று (6.05.2024) ஶ்ரீ காளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தேர் திருவிழாவில் மேளதாளங்களுடன் கொண்டு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ருதி, 600 க்கு 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சங்க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.
Sorry, no posts matched your criteria.