Dharmapuri

News May 14, 2024

லாரி மோதி பாய் வியாபாரி பலி

image

தர்மபுரி: நல்லம்பள்ளியைச் சேர்த்தவர் கோவிந்தராஜ்(பாய் வியாபாரி). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் தேக்கல்நாயக்கன்பட்டி – கடத்தூர் சாலையில் நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News May 14, 2024

தர்மபுரி : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 19 ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தர்மபுரி மாவட்டம் 19 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 86.89% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.72 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.17 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT:தர்மபுரி 90.49% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் மாணவர்கள் 87.44% பேரும், மாணவியர் 93.36% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 90.49% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டம் 23வது இடத்தை பிடித்துள்ளது.

News May 14, 2024

பெருந்திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணி துறையில் சார்பில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் சாந்தி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

News May 13, 2024

தர்மபுரி: மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

குடிநீர் வசதி வேண்டி காலி குடங்களுடன் மனு

image

தருமபுரி மாவட்டம காரிமங்கலம் ஒன்றியம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டு உள்ள இண்டமங்கலம் காலணியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில், இப்பகுதியில் ஒரு மாத காலமாக குடிக்கக்கூட தண்ணி இல்லை என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

News May 13, 2024

அரூர்: அணைக்கட்டில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

image

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், வள்ளிமதுரை அணைகட்டியில் நேற்று(மே 12) குளிக்க சென்ற ராகுல்(29) என்ற இளைஞர் நீரில் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான குழு தேடுதலில் இறங்கினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் ராகுலை சலடமாக மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

News May 13, 2024

பாலக்கோடு: கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவானவருக்கு வலை!

image

பாலக்கோடு தாலுகா வெள்ளி சந்தை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த ஜூன் 2023ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபருடன் ஆந்திராவில் குடும்பம் நடத்தினார். சிறுமி கர்ப்பமான நிலையில், அவரை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு இளைஞர் தலைமறைவானார். சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிந்த போலீசார், இளைஞரை தேடி வருகின்றனர்.

News May 12, 2024

டூவீலரில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

image

காரிமங்கலம் அடுத்த அண்ணாமலை அள்ளிப் பகுதியை சேர்ந்த சங்கரன் (52), பழ வியாபாரி. இவர் நேற்று டூவீலரில் பாலக்கோடு செல்லும்போது எலுமிச்சனஹள்ளி அருகே நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்தார். பின்னர் அவரை மீட்டு பாலக்கோடு ஜிஹெச்-க்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 12, 2024

தர்மபுரி: மே.14 வரை பார்க்கலாம்

image

கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளனது. அதன்படி தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.