Dharmapuri

News September 5, 2025

பாலக்கோடு: ஊராட்சி அலுவலக உதவியாளர் வேலை

image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் காலியாக உள்ள 1 அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் செப்டம்பர் 1 முதல் 30 வரை பெறப்படும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயது சலுகை உண்டு. விரிவான தகவல்கள் www.tnrd.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News September 5, 2025

தர்மபுரி: கடைக்கு போறதுக்கு முன் இத பாருங்க

image

கடைகளில் கூடுதல் விலைக்கு (ம) காலாவதியான பொருட்களை விற்கும் போது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். இதில் வக்கீல் இன்றி நாமே புகார் செய்து உரிய நஷ்டஈடு பெற முடியும். confo-dh-tn@nic.in என்ற இ-மெயிலில், 044-25340050 (மாநில ஆணையம்) (அ ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. <<17618164>>தொடர்ச்சி<<>>

News September 5, 2025

நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

image

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க

News September 5, 2025

தர்மபுரியில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்ட்டுள்ளனர். ஆயாமரத்துப்பட்டி எழிலரசி, குழிப்பட்டி கோவிந்தசாமி, கெங்கனஹள்ளி சரவணன், பையர்நத்தம் வெங்கடாசலம், பென்னாகரம் விஜயலட்சுமி, கோணங்கிநாயக்கனஹள்ளி ராமகிருஷ்ணன், இராமகொண்டஹள்ளி சுப்ரமணி, மாரண்டஹள்ளி மணிவண்ணன், தர்மபுரி சுரேஷ்குமார் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 4, 2025

தர்மபுரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

image

தர்மபுரி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 4, 2025

தருமபுரியில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 கோடி கடன்.

image

தருமபுரி மாவட்டத்தில், மகளிரைச் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில், பரோடா வங்கி சார்பில் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்.3) நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, ரூ.10 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆதரவற்றோருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News September 4, 2025

தருமபுரி: EB துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும். வயது 18 முதல் 32 வரை இருக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. விருப்பமுள்ளவர்கள் அக்.02க்குள் விண்ணப்பிக்க வேண்டும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

தருமபுரி: EB துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும். வயது 18 முதல் 32 வரை இருக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. விருப்பமுள்ளவர்கள் அக்.02க்குள் விண்ணப்பிக்க வேண்டும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

என்ன தகுதிகள் இருக்க வேண்டும் 2/2

image

▶️ பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ஆண்டு வருமானம் 1,20,000 க்குள் இருக்க வேண்டும்.
▶️இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
▶️ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்

*இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!