Dharmapuri

News June 4, 2024

5,407 வாக்குகள் பெற்று சௌமியா அன்புமணி முன்னிலை

image

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 5,407 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 2,180 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1917 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

முதல் சுற்றில் பாமக முன்னிலை

image

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 முதல் செட்டிக்கரை வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பாலவாடி வாக்குச்சாவடி எண்ணிக்கை முதல் சுற்றில்
அதிமுக 259, திமுக ‌‌302, பாமக 363 வாக்குகள் பெற்றுள்ளனன . இதில் பாமக செளமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

News June 4, 2024

சௌமியா அன்புமணி முன்னிலை

image

தருமபுரி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர் முன்னணியில் உள்ளார்.

News June 4, 2024

தருமபுரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

ELECTION: தருமபுரியில் வெல்லப்போவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் மொத்தம் 81.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் ஆ.மணி, அதிமுக சார்பில் அசோகன், பாமக சார்பில் சௌவுமியா அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2019 மக்களவைத் தேர்தல் தருமபுரி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் 70,753 (5.78%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் ஆ. மணியும், அதிமுக சார்பில் அசோகனும், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?

News June 2, 2024

மனைவியுடன் தொடர்பு: வாலிபர் அடித்துக் கொலை

image

பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(34). இவரது நண்பர்கள் அறிவழகன்(34), மாயக்கண்ணன்(42). மணிகண்டனுக்கும் அறிவழகனின் மனைவிக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், மூவரும் மது அருந்தும் போது மணிகண்டனை இருவரும் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த மணிகண்டன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கொலை செய்த அறிவழகன், மாயக்கண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News June 2, 2024

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

image

தர்மபுரி, பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி கிராமத்தில் விவசாய கிணற்றில் பசு மாடு ஒன்று தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு நேற்று (ஜூன் 1ஆம்) தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் போக்குவரத்து செல்வம் தலைமையிலான குழு பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்‌.

News June 1, 2024

தர்மபுரி: மழைப்பொழிவு விவரம்

image

தர்மபுரியில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பென்னாகரத்தில் 3 செ.மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 1, 2024

மதுபான கடைகள் மூட உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில் மக்களவை பொது தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.06.2024 அன்று நடைபெறவுள்ளது. இதனால், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து மதுபான கடைகளும் அன்று மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மீறி மதுபான கடைகள் செயல்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.