Dharmapuri

News June 11, 2024

தர்மபுரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில் (NADCP)5 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள்(ஜூன் 10) முதல் (ஜூன் 30) வரை முகாம் நடைபெறுகிறது. மேலும் கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய 83 குழுக்கள் அமைக்கப்பட்டு இப்பணி அனைத்தும் கிராமங்களிலும் மலை கிராமங்களில் உள்ள மாடுகள் எருமைகளுக்கு செலுத்தப்பட உள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

வேகத்தடை அமைக்கும் பணி

image

அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் சாலையை எளிதாக கடக்க ஏதுவாக வேகத்தடை அமைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்தனர், இதனால் அரசு கலைக்கல்லூரி முன்பு அதிவேகமாக செல்லும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை நெடுஞ்சாலை துறையினால் இன்று(ஜூன் 11)அமைக்கப்படுகிறது.
கல்லூரி தூங்குவதற்கு முன் பணிகள் முடிவடைந்துவிடும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News June 10, 2024

சிறப்பாக பணியாற்றி ஊழியர்களுக்கு பதக்கம்

image

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் சாந்தி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் சங்கரன், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் எஸ்.பொன்னப்பன் ஆகியோர் தங்களுடைய 20 வருட பணிக்காலத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

News June 10, 2024

கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி

image

தருமபுரி, தடங்கம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 5ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் கி.சாந்தி இன்று தொடங்கி வைத்தார். உடன் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுவாமிநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

தர்மபுரி:அரசு கல்லூரியில் சேர்க்கை கலந்தாய்வு

image

தர்மபுரி அரசு கலை கல்லூரி 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்பிற்கான முதலாம் கட்ட கலந்தாய்வு (10/06/24), (11/06/2024), (12/06/2024) ஆகிய தேதிகளில் கல்லூரி கலையரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

தர்மபுரி அருகே விபத்து; மரணம்

image

காரிமங்கலம் கலைக்கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரியில் இருந்து காரிமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பசுவராஜ் (42) சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பசுவராஜ் பலத்த காயமடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதி வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 10, 2024

தர்மபுரி:குரூப் 4 போட்டி தேர்வில் 11,427 பேர் ஆப்சென்ட்

image

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஜூன் 9 குரூப் 4 போட்டி தேர்வு 228 மையங்களில் நடைபெற்றது.62 ஆயிரத்து 630 பேர் எழுத்து தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர் நிலையில் நேற்று நடைபெற்ற இந்த தெருவில் 51 ஆயிரத்து 203 பேர் தேர்வு எழுதினார்கள்.11, 427 பேர் தேர்வு எழுத வரவில்லை.அதாவது விண்ணப்பித்தவர்களில் 18.25 சதவீதம் தேர்வு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News June 9, 2024

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பேட்டி

image

தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததற்கு மகிழ்ச்சி அடைவதாகவும், தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றும் வகையில் தன்னுடைய பணிகள் சிறப்பாக இருக்கும் மற்றும் தனக்கு வாய்ப்பு அளித்த திமுக தலைவருக்கு நன்றி என தர்மபுரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் வழக்கறிஞர் மணி தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

விலங்குகள் ஆம்புலன்ஸில் பணிபுரிய பணி ஆணை வழங்கல்

image

தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு விலங்குகள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்காக தேர்வு மாவட்ட மேலாளர் தலைமையில் நேற்று (ஜுன்.8) நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஓட்டுனர் பணிக்கு 30 பேரும், உதவியாளர் பணிக்கு 65 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

News June 8, 2024

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை மாவட்ட சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.