Dharmapuri

News September 10, 2025

தர்மபுரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.பெறப்பட்ட 57 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன. இத்தகைய முகாம்கள் காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துகின்றன.இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

News September 10, 2025

எஸ்.பி அலுவலகத்தில் குறை தீர் முகாம்

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று தருமபுரி  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்களால் வழங்கப்பட்ட 57 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 57மனுக்களுக்கும்  தீர்வுகாணப்பட்டது.
இன்று புதிதாக 45 மனுக்கள் பெறப்பட்டன.

News September 10, 2025

தர்மபுரி: விபத்தில் சமையல் மாஸ்டர் பலி

image

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் பூவரசன். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு கடந்த, 7 மாதங்களுக்கு முன் திருமணமானது.நேற்று (செப்-9) அவர் தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் கெரகோடஹள்ளி அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த சரக்கு லாரியின் பின்பக்கம் பைக் மோதியது. இதில் பூவரசன், சம்பவ இடத்திலேயே பலியானார்.

News September 10, 2025

தர்மபுரி: மின் துறையில் SUPERVISOR வேலை!

image

தர்மபுரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இங்கு <>கிளிக்<<>> செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். கடைசி தேதி 17.09.2025 ஆகும். நாமக்கல் மக்களே யாருக்காவது பயன்பாடும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 10, 2025

தர்மபுரி: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே <>இங்கே<<>> கிளிக் செய்து 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 10, 2025

அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகள்: ஆட்சியர் உத்தரவு

image

காரிமங்கலம் வட்டத்தில், 32 செங்கல் சூளைகள் உரிய அரசுப் பதிவு பெறாமல் இயங்கி வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அவர்களுக்குக் குறிப்பாணை வழங்கப்பட்டது. 32 செங்கல் சூளை உரிமையாளர்களும், அரசு அனுமதி பெற உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை. எனவே, பதிவு பெறாமல் இயங்கும் இந்த 32 செங்கல் சூளைகளையும் மூடி சீலிடுமாறு, மாவட்ட ஆட்சியர் சதிஸ் உத்தரவிட்டுள்ளார்.

News September 10, 2025

தர்மபுரி: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

image

தர்மபுரி மாவட்ட இளைஞர்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் செக்யூரிட்டீஸ் பிரிவில், ‘டிரெய்னி’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க அக்.6 கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு, இங்கு <>கிளிக்<<>> செய்து தெரிந்துகொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News September 10, 2025

தர்மபுரி: பாராமெடிக்கல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

image

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பாராமெடிக்கல் சான்றிதழ் படிப்புகளுக்கு 100 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. www.dmcdpi.tn.gov.in என்ற இணையதளத்தில் 12.09.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். உதவித்தொகையுடன் கூடிய பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 10, 2025

தர்மபுரி: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே இங்கு <>கிளிக்<<>> செய்து தெரிந்துக்கொள்ளலாம். இது போன்ற நல்ல தகவல்களை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்

News September 10, 2025

தர்மபுரி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

தர்மபுரி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!