India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000
4. விண்ணப்பிக்க இங்கே <
5. கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை திதியாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். தர்மபுரியில் தென்பெண்ணை ஆற்று கரைகள், ஒகேனக்கல் காவிரி ஆறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் சமைத்த உணவை முதலில் காக்கைக்கு வைத்த பின்னரே மற்றவர்கள் உண்பது வழக்கம். ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <

அதியமான் நெடுமான் அஞ்சி, சங்க கால தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவர். கடையேழு வள்ளல்களில் இவரும் ஒருவர். இன்றைய தர்மபுரி இவருடைய தலைநகராக இருந்தது. உண்டால் நீண்ட நாள் வாழவைக்க கூடிய நெல்லிக்கனி தனக்கு கிடைத்தும் அதனை தான் உண்ணாமல் ஔவைக்குக் கொடுத்தவர். “நான் இறந்தால் ஒருவன் இறப்பான். ஆனால், நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தமிழ் மொழி வாழும்” என்று ஔவையிடம் கூறியவர். SHARE IT!

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று (செப்.20) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

தருமபுரி அன்னசாகரம் எரங்காட்டுக்கொட்டாய் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை ஒருவர் கடத்த முயன்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் இந்த செயல் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை முழு கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்

தர்மபுரி மக்களே! EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம். ஷேர் பண்ணுங்க!

IBPS பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13,217 காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 688 ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் கணினி திறனும் பெற்று இருக்க வேண்டும். ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுடையவர்கள் இந்த <

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

தர்மபுரி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <
Sorry, no posts matched your criteria.