India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் காலாவதியான உணவு, அதிக தொகைக்கு விற்பனை செய்தல், தரமற்ற உணவு போன்றவற்றை உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களை foodsafety.tn.gov.in என்ற இணையதள மூலம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெக்கானிக்கல், எலெட்ரிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் டிப்ளமோ/பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் <

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில், மகளிரின் திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (TNWDC) மூலம், சமுதாய மேலாண்மை பயிற்சி மையங்களில் (CMTC)சமுதாய வளப் பயிற்றுநர்கள் (CRP) தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். குறைந்தபட்சம் 21 வயது, ஐந்து ஆண்டுகள் சுயஉதவிக் குழு அனுபவம், மற்றும் கைபேசி செயலி திறன் கொண்டோர் 30.09.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <

தமிழ்நாடு அரசு 2025-26ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் நடைபெறும் விஜயதசமி தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் பங்கேற்கும் 150 பௌத்த யாத்திரிகர்களுக்கு, நபர் ஒருவருக்கு ரூ.5000 வரை மானியம் வழங்குகிறது. விண்ணப்பங்கள் www.bcmbcmz.tn.gov.in தளத்தில் அல்லது தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கிடைக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் 30.11.2025க்குள் விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில் கிராம உதவியாளர் 2 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பத்தை https://dharmapuri.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.09.2025 முதல் 10.10.2025 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவுஅஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், முக்கனூரைச் சேர்ந்த பிரபாகரன், தன் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்கு, வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் (53) என்பவரிடம் ரூ. 5 லட்சம் கொடுத்தார். வேலை கிடைக்காததால் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சுரேஷ்குமார் தர மறுத்து, பிரபாகரனை ஆபாசமாகப் பேசியுள்ளார். புகாரின் பேரில், சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி மீது காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.25) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தர்மபுரி மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு <
Sorry, no posts matched your criteria.