India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகத்தில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து முதற்கட்டமாக 5,000 ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் வந்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (20.12.2024) பார்வையிட்டார். உடன் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் ராஜராஜன் இருந்தனர்.
தமிழ்நாடு நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண் அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் விவரம்; காலை 9:30 காரிமங்கலம் அறிவுசார் மைய புதிய கட்டிடத்தை திறந்து வைக்கின்றனர், காலை 10 மணிக்கு காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 11 மணிக்கு தர்மபுரி மதுரபாய் திருமண மண்டபத்தில் புது தொழில் கண்காட்சியை துவக்கி வைக்கின்றனர்.
தர்மபுரி தொழில் மற்றும் ஸ்டார்ட்-அப் கண்காட்சி 2024 நாளை (டிசம்பர் 21) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 22) ஆகிய இரு நாட்களில் தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தொழில் நிறுவனங்கள், தொழில் கண்காட்சி மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள், தொழில் தொடங்குவோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி வழியாக ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில் ஜனவரி மாதம் 4ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை தென்னக ரயில்வே நீட்டித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ராமேஸ்வரம் புனித பயணம் செய்ய ஹூப்ளி ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை பயன்படுத்தி வந்தனர். சிறப்பு ரயில் சனிக்கிழமை தர்மபுரி வழியாக சென்று, ஞாயிற்றுக்கிழமை வரும். தற்போது இந்த சேவை நீட்டிப்பால் ஆன்மீக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (டிச.20) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், ஐடிஐ கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் விற்பனையாளர், மார்க்கெட்டிங் உட்பட பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரியை அடுத்த கடகத்தூரில் நாளை காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பள்ளி படிப்பு, டிப்ளமோ, டிகிரி உள்ளிட்ட அனைத்து கல்வித் தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டி போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யவுள்ளனர். சேர் செய்யவும்.
மதுவிலக்கு வேட்டையின் போது பிடிப்பட்ட வாகனங்கள் நேற்று (டிசம்பர் 18) தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் 74 இருசக்கர வாகனங்கள், 5 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 79 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது அவை 12,25,146 ரூபாய்க்கு ஏலம் போனது. அவை அரசு கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
டிசம்பர் 23 அன்று தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. டிச-24 அன்று” உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டிய முகவரி dpicpac@gmail.com. தர்மபுரி மாவட்ட மைய நூலகரின் கைப்பேசி எண்:9486688323
அரூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி தலைவர் இளையராஜா,ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.”ஏழாண்டாக அரூர் தொகுதி தலைவராக நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி உள்ளேன். தற்போது கனத்த இதயத்துடன் நான் கட்சியிலிருந்து விலக முடிவை எடுத்துள்ளேன்.தர்மபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கூண்டே கிடையாது. நாங்கள் மட்டும் தான் உள்ளோம். தற்போது நாங்களும் விளக்குகிறோம் என்றார்.
தர்மபுரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டின் அளவை குறைக்க முடியும். பகலில் அதிகளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் இயன்ற அளவு தங்களது விவசாய மின்மோட்டார்களை பகல் நேரத்தில் இயக்கி உபயோகப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.