Dharmapuri

News July 6, 2025

குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய பள்ளி மாணவி

image

தருமபுரி சாலை விநாயகர் கோவில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் சஷ்மிதா ஸ்ரீ என்ற மாணவி புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக இன்று (ஜூலை 6) கூந்தல் தானம் செய்துள்ளார். இந்த நற்செயலை மேற்கொண்டதற்காக இவரையும் இவரது பெற்றோரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

News July 6, 2025

தர்மபுரி; உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும், ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு ( 04342-296188) தொடர்பு கொள்ளுங்கள். *10th முடித்த நண்பர்களுக்கு பகிருங்கள்* <<16962456>>தொடர்ச்சி<<>>

News July 6, 2025

கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

image

சைக்கிள், பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

தர்மபுரி கலெக்டர் தெரிவித்த செலவு விவரங்கள்

image

தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2021-25ஆம் ஆண்டு வரை ரூ.18.09 கோடி மதிப்பீட்டில் 298 பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், (NNT) 2021-25ஆம் ஆண்டுவரை ரூ.13.04 கோடி மதிப்பில் 228 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.52.45 கோடி மதிப்பீட்டில் 1959 பணிகள் நடைபெற்றது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

வீரர்களுக்கு நிதியுதவி: தர்மபுரி ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேசிய மற்றும் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற, தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதியுள்ளோர் <>இங்கு கிளிக் செய்து <<>> விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து ஜூலை 31, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கு பகிர்நது உதவுங்கள்*

News July 5, 2025

தர்மபுரி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் இரவு ரோந்துப் பணிக்கான அலுவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A. சிவராமன் அவர்கள் இந்த இரவு ரோந்து பணிக்கு பொறுப்பாக உள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியிலும் காவல் நிலையங்களின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்காக அனைத்து ரோந்து அலுவலர்களின் தொடர்பு எண்கள் உள்ளன.

News July 5, 2025

நாளை தருமபுரி வழியாக ரயில்கள் இயக்கப்படாது

image

ஒசூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாரநாயக்கனஹள்ளி ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் நாளை ஜூலை 6 ஆம் தேதி பெங்களூரிலிருந்து வரும் 5 ரயில்கள் தருமபுரி வழியாக இயக்கப்படாமல் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக சேலத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ரயிலில் பயணம் செய்யும் நண்பர்களுக்கு பகிரவும்*

News July 5, 2025

பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே<> இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து <<>>பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & தர்மபுரி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04342-260895) அழைக்கலாம். *உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கட்டாயம் பகிருங்கள்*

News July 5, 2025

தர்மபுரி தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

image

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <>இந்த லிங்க் மூலம் அப்ளை செய்து<<>> இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் தர்மபுரி மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். தொழிலாளர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<16949800>>தொடர்ச்சி<<>>

News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம்

image

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!