India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பு பதிவு செய்து, ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும், அடையாள அட்டைஇல்லாத வீரர்கள் ஜல்லிக்கட்டு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (08.01.2025) நடைபெற்றது. அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திகவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலஜங்கமனஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இராகாயத்ரி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மக்கள் கலந்துகொண்டனர்.
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை தோறும் நடைபெறுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 1850 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. காவல்துறை நடத்தும் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது என நேற்று காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான 8ஆம் வகுப்புக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டத் தேர்வு 22.02.25 அன்றும், 9ஆம் வகுப்பிற்கான ஊரகத்திறனாய்வு தேர்வு 01.02.25, 10ஆம் வகுப்பிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 25.01.25 அன்றும் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சி வழங்கப்படவுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் காணிகாரஅள்ளி கிராமத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தொப்பூர் சாலை விரிவாக்கத்திற்கான பூர்வாங்கப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி ஆகியோர் இருந்தனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேரவாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று தெரிவித்துள்ளார். இதற்கு www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
முக்குலம் ஊராட்சியில் 100 சதவீதம் கருவேல மரங்களை அகற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி நிர்வாகிகள், மக்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் உதவியுடன் ஏரிகளில் உள்ள சீமை கருவேலன் மரங்களை அகற்றும் பணி தொடங்கியது. முக்குலம் ஊராட்சியில் உள்ள 5 ஏரிகளில் முற்றிலும் சீமை கருவேல மரம் அகற்றப்பட்டது.
தருமபுரியில் மின்தடை, மின் கம்பிகளின் மீது உரசும் மரக்கிளைகளை அகற்ற உள்ளிட புகார்களை தெரிவிக்கலாம். இலவச எண்: 1912, 1800 425 3306, வாட்சப் எண் : 94458 86385 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.