India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி நிலையம் இணைந்த ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்தியேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு:04342-232311,93848 24260 என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தூள்செட்டி கால்வாய் பணிகள் நிறைவேற்றப்படும் எனவும், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து வருவதாகவும், மேலும் தருமபுரி மாவட்டத்தை முன்னேற்றம் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி பாலக்கோட்டில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மருதிப்பட்டி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 24-25 ஆம் ஆண்டு கல்வி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்ற நபர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நேரடியாகவோ, 636705 அஞ்சல் மூலமாகவோ 20/11/2024 க்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம் என ஆட்சியர் சாந்தி வெளியிட்டார்
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1501 வாக்கு சாவடிகளை உள்ளடக்கிய 907 வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் கோரிக்கைகளுக்கான படிவங்கள் பெறப்படும். படிவங்களை பெறுவதற்கு ஏதுவாக நவ 16, 17 மற்றும் 23, 24 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆண்டு பெறப்பட்ட ஓய்வூதியர் மனுக்களின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ஓய்வூதியர்கள் இடம் இருந்து பெறப்பட்ட 39 மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனுதாரர்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, மற்றும் அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் இடமிருந்து படிவங்களை பெற்றிட வாக்குசாவடி மைய அலுவலர்கள் DLO நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை( நவ 15) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், லிங்கை கிளிக் செய்யுமாறு கூறி, போலியான லிங்குகளை அனுப்பி தரவுகள் திருடப்படுவதால், எச்சரிக்கையாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்யலாம் எனக் கூறியுள்ள காவல்துறை, புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம் எனக் கூறியுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 5,6,7 தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வருகை தர உள்ளார். மேலும் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை குறித்தான அரசாணை கடிதம், இமெயில் மூலம் நேற்று பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கேபி அன்பழகன் எம்.எல்.ஏ., இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படும் சிறப்பு வாக்குச்சாவடி சுருக்க திருத்த முகாமில் அதிமுகவினர் அனைவரும் பொதுமக்களுக்கு துணையாக இந்த பணியில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.