India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு & ஒலி மாசு அளவை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரியில் வழக்கமாக காற்றின் தர குறியீடு 100 புள்ளியாக இருக்கும், தீபாவளி பட்டாசு வெடிக்கப்பட்டதில் மாசுபாடு அதிகரித்து 120 புள்ளிகளும் வரை அதிகரித்து இருக்க வாய்ப்புள்ளதாக நேற்று (அக்.22) அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் நேற்று (அக்.22) ஒரு கிலோ தக்காளி பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (அக்.23) கிலோவிற்கு ₹8ரூபாய் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிலோ ₹26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் தக்காளி விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (அக்.23) மழை பதிவு நிலவரம்; அரூர் 113 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 58 மில்லி மீட்டர், மொரப்பூர் 33 மில்லி மீட்டர், பென்னாகரம் 29 மில்லி மீட்டர், மாரண்டஅள்ளி 24 மில்லி மீட்டர், தருமபுரி 23.1 மில்லி மீட்டர், நல்லம்பள்ளி 14 மில்லி மீட்டர், பாலக்கோடு 12 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 12 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

தருமபுரி அங்கன்வாடி பள்ளிகளுக்கு இன்று (அக்.23) மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். தொடர்ந்து பொலிந்து வரும் கனமழையால், மற்றும் மாணவர்களின் நலன் கருதி இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும், பள்ளி நடந்து கொண்டிருக்கும் 1 மணிநேரத்திற்கு முன்பாகவே மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது .

பாலக்கோடு கொம்மநாயக்கனஅள்ளி NHல்
சுமார் 45 வயது பெண் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் நேரில் வந்து பார்வையிட்டார். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர் மேலும் கொல்லப்பட்டவர் கள்ளக்காதல் விவகாரர்கள் கொலை செய்யப்பட்டாரா எனவும் விசாரணை நடந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையையொட்டி, பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகள், சேதங்கள், உயிரிழப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள்: 1077, 04342-231077, 04342-231505, 04342-230067 என ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்

அரூர் (வழி) தானிப்பாடி சாலையில் பருவமழையினால் வெள்ளம் பெருகெடுத்து ஓடுவதால் கி.மீ 47/8 ல் மாற்றுப்பாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால் சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு அமைத்து மாற்றுப்பாதை செல்ல மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். தர்மபுரியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.22) இரவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

மின் வாரியத்தில் இருந்து ஓர் விழிப்புணர்வு . மின் சேவைகள், மின் கம்பிகள் அறுந்து தொங்கிகொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, மற்றும் மின் தடை குறித்து புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்பாடும் மாநில நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை (9498794987) நெம்பர் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.