India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி நேற்று இண்டூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். இதில் தருமபுரி கிழக்கு மாவட்டம் கழக செயலாளர் தடங்கம், சுப்பிரமணி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன்,கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்கு பெட்டி இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் குரும்பட்டி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி தர்மபுரி மாவட்ட தேர்தல் அதிகாரியும் ,மாவட்ட ஆட்சியருமான சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் திமுக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் மணியை ஆதரித்து உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் இன்று தர்மபுரி பாராளுமன்ற பா.ம.க வேட்பாளர் செளமியா 2.30 மணிக்கு தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். அவர் மணியம்பாடி, போசி நாயக்கனஅள்ளி, வேடியூர், லிங்கநாயக்கை அள்ளி வெ, புதூர் கடத்தூர் பேரூராட்சி, நல்லநாகு அள்ளி முத்தனூர் அஸ்தகிரியூர் புது ரெட்டியூர் ஆகிய பகுதிகளிலிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
தர்மபுரி வட்டம், குமாரசாமி பேட்டை அடுத்த வேப்பமரத்து கொட்டாய் ,பகுதியில் உள்ள பெருமாள் என்பவரின் வீட்டில் நேற்று சுமார் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (போ)
பா.வெங்கடேசன் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவிக்கொண்டு உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதி
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைய மகளுமான
சஞ்சமித்ரா இன்று நகராட்சி உட்பட்ட நகை கடை வீதிகளில் வீடு வீடாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் இருந்தனர்.
இன்று
காரிமங்கலம் அருகே காட்டுசீகல அள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கெரகோட அள்ளியை சேர்ந்த ஞானசேகர் (43) நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டாடா ஏஸ் வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு போன்ற இடங்களில் பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஊர்மக்கள் பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர்.
மார்ச் 30 இன்று நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கிராமிய கலை குழுவினருடன் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தர்மபுரி உழவர் சந்தையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் கையேடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார் எனது வாக்கு விற்பனைக்கு இல்லை தெரிவித்தனர்.
மோட்டாங்குறிச்சியை சேர்ந்த அருண் இவர் பொம்மிடி ஸ்டேஷனில் கேங் எண் 3ல், டிராக்மேனாக பணியாற்றி வந்தார். இவர் மற்ற ஊழியர்களுடன் நேற்று பொம்மிடி – புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயில் பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் எதிர்ப்பாராத மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.