India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி நான்கு ரோட்டில் அமைந்துள்ள உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிலோ பூண்டு ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரியில் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது மக்களிடையே பேசுகையில், ‘சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கும் பாமக, சமூகநீதி பேசும் பாமக, அவற்றிற்கு நேரெதிரான பாஜகவுடன் கூட்டு சேர்ந்த மர்மம் என்ன?’ என கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தருமபுரி மக்களவைத் போட்டியிடும் அபிநயா பொன்னிவளவனை ஆதரித்து தருமபுரி குமாரசாமி பேட்டை அருகில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வருவோம் என சீமான் உறுதி அளித்தார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஊராட்சியில் உள்ள ஜீவா நகர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் ஜீவா நகர் கிராமத்தை சேர்ந்த அனைவரும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் அனைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் ஒட்டப்பட்டியில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மணி மீன் வியாபாரம் செய்து வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் கட்சியினை கலந்து கொண்டனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஏப்.7) பிரச்சாரம் மேற்கொள்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக, தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்பாளராக களம் காண்கிறார். அவரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்யுவுள்ளார். ஏப்.19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிடுத்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளான ஏழை மக்களுக்கு உணவு, இரத்ததானம், ஆதரவற்று இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வது போன்ற சேவைகளை ‘மை தருமபுரி’ செய்து வருகிறது. இதையடுத்து, இந்த அமைப்பிற்கு அசுபா நிறுவனம் சார்பில் ‘சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது’ நேற்று(ஏப்.6) சென்னையில் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லம்பள்ளி வட்டம் பட்டாகப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரது வீட்டில் ஏப்ரல் 5ஆம் தேதி நாகப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர். பாம்பு படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.