Dharmapuri

News April 25, 2024

தர்மபுரி அருகே விபத்து

image

தர்மபுரி: ரேக அள்ளி அண்ணாநகர் பகுதி சேர்ந்த எல்லம்மாள் 51. கடந்த 22ம் தேதி இரவு 10 மணிக்கு சாலை கடக்கும்போது பொம்மிடி பகுதியில் இருந்து வந்த மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த எல்லம்மாள் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரது மகள் மகேஸ்வரி இன்று பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 25, 2024

சித்திரம் பேசும் சென்றாயன் பெருமாள் கோவில்

image

தர்மபுரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள அதியமான் கோட்டையில் உள்ளது சென்றாய பெருமாள் கோவில். இக்கோவில் மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோவில் மண்டப விதானத்தில் அழகிய 13ஆம் நூற்றாண்டின் வண்ண ஓவியங்களும் அதன் விளக்க எழுத்துக்களும் உள்ளன. இது 500 படிகள் மற்றும் 48 தூண்கள் கொண்ட மலைக் கோவிலாகும். இக்கோவில் ஹொய்சாளர்கள் கட்டடக்கலையில் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.

News April 25, 2024

தருமபுரி: ஒரே நாளில் 5 கடைகளில் கொள்ளை!

image

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சி தொப்பூரில் செயல்பட்டு வந்த டெக்ஸ்டைல்ஸ் கடையில் பூட்டை உடைத்து நேற்று(ஏப்.23) இரவு ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள புடவைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள நகைக் கடை உட்பட 5 கடைகளில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

News April 24, 2024

தர்மபுரி அருகே உயர்கல்வி வழிகாட்டல்

image

தர்மபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் -2024 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி துவங்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

News April 24, 2024

தருமபுரி: மாமியார் வீட்டை சேதப்படுத்திய போலீஸ்

image

தருமபுரி மாவட்டம் கோலம்பட்டியை சேர்ந்த செந்தில் குமார்(40) அசாமில் போலீசாக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் பாப்பநாயக்கன்வலசை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று(ஏப்.22) மாமனார் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார் மாமியாருடன் சண்டையிட்டு வீட்டை சேதப்படுத்தி உள்ளார். இது குறித்து அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 24, 2024

தருமபுரியில் 106 டிகிரி!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று(ஏப்.22) அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. அதன்படி, முதலிடமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், 2வதாக தருமபுரி, திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

News April 24, 2024

தர்மபுரி அருகே விபத்து

image

காரிமங்கலம் காவேரிபட்டிணம் சாலையில் இருந்து மாரண்டஅள்ளி செல்வதற்காக காரில் வந்த இரு நபர்கள் எதிரே வந்த தண்ணீர் வாகனம் பிக்கப் மீது தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி சாலையோர இருந்த பனைமரத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த இரு நபருக்கும் பலத்த ரத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 24, 2024

வாக்குப்பெட்டி அறையை ஆய்வு செய்த கலெக்டர்

image

2024 மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணப்படும் தருமபுரி செட்டிகரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று 22.04.2024 கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பதை பார்வையிட்டார்.

News April 24, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு

image

தருமபுரி மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு மின்னனு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இன்று ஏப்ரல் 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அவர்கள் சிசிடிவி காட்சி மற்றும் பாதுகாப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

News April 24, 2024

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா!

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஏப்.22) குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பென்னாகரம் அடுத்த மூங்கில் மோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டிற்கு செல்லும் வழித்தடத்தில் ஓடை புறம்போக்கு வழிப்பாதை எனக்கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்றக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!