Dharmapuri

News January 25, 2025

உங்கள் ஊர் செய்தி வே2நியூஸ் மூலம் சென்றடைய

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? <>இங்கே க்ளிக் பண்ணுங்க<<>>

News January 25, 2025

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை(ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம் கிராம சபைக் கூட்டம் நாளை காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. இந்த செய்தியை உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News January 25, 2025

தனியார் பஸ் மோதி எல்ஐசி ஏஜென்ட் பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரத்தில் வசித்து வரும் சிவசங்கர் எல் ஐ சி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தமாக இன்று சாமியாபுரம் கூட்ரோட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது வெங்கடசமுத்திரம் அருகே சேலத்தில் இருந்து பொம்மிடி நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 25, 2025

தருமபுரியில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்

image

பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், தனி வட்டாட்சியா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர் முகாம்கள் இன்று நடத்தப்படவுள்ளன. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 25, 2025

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்

image

தருமபுரியில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஜன.26) ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 24, 2025

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை பணி நாள்

image

தர்மபுரி மாவாட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு மாணவர்கள், அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாடும் வகையில், கடந்த ஜன.17ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அவ்விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை (ஜன.25) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. SHARE IT

News January 24, 2025

வேலை வாய்ப்பு முகாம்: நிறுவன பட்டியல் வெளியீடு

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (ஜன.24) காலை 10:00 மணி முதல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த முகாமிற்கான 23 தனியார் நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 24, 2025

மகளிர் சிறப்பு இயற்கை சந்தை –  ஆட்சியர் தகவல்

image

தருமபுரி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்று விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்தும் பொருட்டு இயற்கை சந்தையானது நடத்தபடவுள்ளது. வரும் 26ம் தேதி முதல் இயற்கை சந்தை காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News January 24, 2025

தருமபுரியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (ஜன.24) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நிறுவனங்களின் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இந்த வாய்ப்பை வேலைவாய்ப்பற்றோர் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 24, 2025

இயற்கை சந்தை திட்டம் 26ம் தேதி முதல் அமல்

image

தர்மபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து இயற்கை முறையில் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வரும். மேலும், இயற்கை சந்தை காலை 6 – 11 மணி வரை தர்மபுரி உழவர் சந்தையில் நடைபெறவுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

error: Content is protected !!