Dharmapuri

News March 28, 2024

தருமபுரி: லாரி மோதி 2 பேர் பலி

image

தருமபுரி மாவட்டம் கடகத்தூர் அடுத்த செல்லியம்பட்டி பகுதியில் நேற்று(மார்ச் 27) மாலை லாரி மற்றும் டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. சேலத்தில் இருந்து பாலக்கோடு செல்லும் வழியில், டெம்போ மேல் லாரி ஏறியதில் டெம்போ டிரைவர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடினர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 28, 2024

பாலக்கோடு அருகே வைக்கோலுடன் எரிந்த லாரி!

image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், கோவிலூர் என்ற இடத்தில் நேற்று(மார்ச் 27) வைக்கோல் பாரம் ஏற்றி வந்த ஈச்சர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News March 27, 2024

பாலக்கோடு: பற்றி எரிந்த நெருப்பு

image

புலிகரை அருகே உள்ள கோவிலூரில் லாரி ஒன்று உயரத்தில் வைக்கோல் ஏற்றியதால் மின் கம்பியில் உரசி தீ பற்றியது. இதை அறிந்த ஓட்டுனர் வாகனத்தை வேகமாக ஒட்டி ஊரை விட்டு வெளிப்புறத்திற்கு கொண்டு சென்றார் .ஊர் பொதுமக்கள் அருகே இருந்த போர்வெல்லில் நீரை கொண்டு வந்து ஊற்றியும், மண்ணை தூவியும் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

News March 27, 2024

தருமபுரி வருகை தரும் முதல்வர்

image

தருமபுரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து வருகின்ற 29 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தருமபுரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதில் தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் , சுப்பிரமணி ஆகியோர் இணைந்து திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். முதல்வர் வருகையையொட்டி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

News March 27, 2024

பாமக வேட்பாளர் செளமியா சாமி தரிசனம்

image

மேச்சேரி தித்திகிரிபட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார். உடன் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, சதாசிவம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 27, 2024

தருமபுரி: கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தனி மற்றும்மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அவர்களது 9363962213 என்ற கைப்பேசி எண்ணில் அல்லது என்ற மின்னஞ்சல் முகவரி generallobs2024.dpi@gmail.com) தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி இன்று தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

பாலக்கோடு: 7 பவுன் நகை கொள்ளை!

image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதுபட்டாணியர் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி பழனியம்மாள். இவர் சம்பவத்தன்று இரவு தூங்க சென்று, அதிகாலை எழுந்து பார்த்தபோது அவரின் இரும்புபெட்டியில் வைத்திருந்த 6 பவுன் செயின், 1 பவுன் பவுன் செயின என 7 பவுன் நகை, ரூ.15 ரொக்கம் திருடுபோயிருந்தது. இது குறித்து நேற்று(மார்ச் 26) அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2024

தருமபுரி பின்தங்கி உள்ளது – நாம் தமிழர் வேட்பாளர்

image

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா நேற்று(மார்ச் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர், தருமபுரி மாவட்டம் 2 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு வறட்சி ஏற்பட காரணம் மலைகளை உடைத்தால் எப்படி பருவ மழை வரும் என கூறினார்.

News March 26, 2024

தருமபுரி வேட்பாளர் காலபைரவர் கோவிலில் வழிபாடு

image

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி பாமக பெண் வேட்பாளர் செளமியா அன்புமணி வழிபாடு செய்தார். அப்போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 26, 2024

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

தர்மபுரி தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி இன்று நாம் தமிழர் கட்சியினர் 2 மணி அளவில், தேர்தல் அதிகாரியுமான மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்களிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் கூட்டணி இருக்கும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!