Dharmapuri

News March 22, 2024

மு.முதல்வரை சந்தித்த தருமபுரி வேட்பாளர்

image

தருமபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக நேற்று(மார்ச் 21) அசோகன் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று(மார்ச் 21) சென்னை அதிமுக கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்த அசோகன், வாழ்த்து பெற்று தனது நன்றியை தெரிவித்தார். இதில் மு.அமைச்சர் கே.பி.அன்பழகன், பூக்கடை ரவி, பொன்னுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News March 21, 2024

தருமபுரி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடவுள்ளார். இவருக்கு 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றபோது, இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தி.மு.கவின் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார் மணி.

News March 21, 2024

தருமபுரி அதிமுக வேட்பாளர் இவர்தான்!

image

தருபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக அசோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

தருமபுரி: முதியோர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க..!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

image

தருமபுரி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் நேற்று சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் கோட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 20, 2024

தருமபுரி: திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகம்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளராக அ.மணி களமிறங்குவதாக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து, தருமபுரி திமுக தலைமை அலுவலகத்தில் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள், மற்றும் திமுகவினர் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News March 20, 2024

தருமபுரி திமுக வேட்பாளர் இவர்தான்!

image

தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளராக ஆ.மணி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

தருமபுரி: வீட்டிலிருந்து வாக்களிக்கும் படிவம் வழங்கல்

image

மக்களை தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் மேடு பகுதியை சேர்ந்த 100 வயது முதியவருக்கு வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேற்று(மார்ச் 19) வழங்கினார். இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 19, 2024

தர்மபுரி அருகே விபத்து

image

அரூர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு 28. இவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டியானூர் கிராமத்தை சேர்ந்த பரிமளா 29 என்பவரை டூவீலரின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு சென்றார். பறையபட்டி அரசுப்பள்ளி எதிரே வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!