India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தோழர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி – மொரப்பூர் ரெயில் இணைப்பு பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பன குறித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

தர்மபுரி மாவட்டம், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைசுஹள்ளியில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று (பிப் 4) சர்வதேச புற்றுநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்று நோய்க்கு இலவச பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியைஷேர் செய்யவும்.

மாரண்டஅள்ளி அருகே சீறியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேசன் 52, இவர் சமைப்பதற்காக சிலிண்டர் அருகே சென்ற போது திடீரென வெடித்து சிதறியதில் அவர் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். வீட்டின் பெரும் பகுதியும் சேதம் அடைந்தது. படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அரசை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் (பிப்ரவரி 8) அன்று நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு, தர்மபுரி எம்.பி வழக்கறிஞர் மணி, தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, குத்தாலம் அன்பழகன் ஆகியோர் கண்டன பொதுக்கூட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து சரிவு இன்று (04.02.2025) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 700 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 1000 கன அடிக்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்லம்பள்ளி அடுத்த மூக்காண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். இவரும் அவரது மனைவி அண்ணபூரணியும் தனது நிலைத்தில், உளுவல் அறுவடை செய்து கொண்டிருந்தபோது தானியம் அடிக்கும் இயந்திரத்தில், அண்ணபூரணியின் புடவை மாட்டி தலை சிக்கி சம்பவயிடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து, காசிவிஸ்வநாதன், இயந்திரத்தின் ஓட்டுனர் மீது அளித்த புகாரின் பேரில் தொப்பூர் போலிஸ் தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை ஸ்காலர்ஷிப் திட்டம் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (https//umis.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் அறிந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் காவல் உட்கோட்ட எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்த, பென்னாகரம் தொகுதி நாதசம்பட்டியை சேர்ந்த சுபிக்ஷா என்ற மாணவிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவில் அதிகாலை இன்று (பிப்3) கல்லண்டை மீன் எடுத்துக்கொண்டு வந்த கனரக வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை அடுத்து அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.