Dharmapuri

News April 18, 2024

தருமபுரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

image

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.

News April 16, 2024

தருமபுரி அருகே முதலிடம்!

image

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பண்பாடு மற்றும் விளையாட்டில் வட்டார அளவில் பலகுரல் போட்டியில் நகராட்சி பள்ளி மாணவர் முதல் இடம் பெற்ற வெ.ஜோதிஸ்வரன் மாணவரை இன்று வட்டாரக் கல்வி அலுவலர் த.ஆசிரியர்  கு.விஜயலட்சுமி சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவி்த்தனர். உடன் வகுப்பு ஆசிரியர்
வ.செளந்திரபாண்டியன் உடனிருந்தார்.

News April 16, 2024

தர்மபுரி: நீச்சல் குளத்தில் குதூகலம்

image

தர்மபுரி,செந்தில் நகரை அடுத்துள்ள ராஜாஜி நீச்சல்குளம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பாக நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது இந்த நீச்சல் குளத்தின் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை குதூகலமாக குளித்து வருகின்றனர் தர்மபுரியில் நாளைக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இன்று வெயிலின் தாக்கம் 12 டிகிரி அதிகரித்துள்ளதால் வெயிலின் தாக்கம் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

News April 16, 2024

தர்மபுரி அருகே மாணவியின் விபரீத செயல்

image

பாப்பாரப்பட்டி சேர்ந்த பூங்காவனம் அவரது மனைவி தேவி.இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நேற்று மீண்டும் குடும்ப பிரச்சினையில் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகள் புனிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன. அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா உயிரிழந்தார்.

News April 16, 2024

தர்மபுரி அருகே மாணவியின் விபரீத செயல்

image

பாப்பாரப்பட்டி சேர்ந்த பூங்காவனம் அவரது மனைவி தேவி.இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நேற்று மீண்டும் குடும்ப பிரச்சினையில் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகள் புனிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன. அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா உயிரிழந்தார்.

News April 15, 2024

தர்மபுரி அருகே பற்றி எரிந்த கார்

image

நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை பகுதியில் இன்றும் மதியம் மூன்று மணி அளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. பொதுமக்கள் இடையே கேட்டபோது அங்கே அருகில் குப்பை தொட்டிக்கு தீ வைத்துள்ளனர். அந்த தீயானது காரின் அருகே பற்றி எரிந்தது. இந்த தீயினால் 5 லட்சம் மதிப்புள்ள கார் கருகி நாசமாகியது.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை தீயை அணைத்தனர்

News April 15, 2024

2 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்

image

இன்று தர்மபுரி பஸ் நிலையத்தில் கோவையை சேர்ந்த பிரித்வி 5 என்ற குழந்தை காணாமல் போனது. அதன் தாயார் டயானா அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ விஜய சங்கர் தலைமையில் டவுன் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சேலம் பஸ்ஸில் குழந்தை ஏறியது தெரிந்தது. உடனடியாக ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து மகளிர் போலீசார் மூலம் குழந்தையை மீட்டனர். 2 மணி நேரத்தில் மீட்ட போலீசாரை அனைவரும் பாராட்டினர்.

News April 15, 2024

காலபைரவர் கோவில் சிறப்பு பூஜை

image

தர்மபுரி, நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான் கோட்டையில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காலபைரவர் திருக்கோயிலில் நேற்று(ஏப்ரல் 14ஆம் தேதி) சித்திரை விஷூகனியை முன்னிட்டு மூலவருக்கு ராஜ அலங்காரம் நடைபெற்றது. திருக்கோயிலில் வருகை புரிந்த பக்தர்களுக்கு புது நெல்லில் வைத்து பூஜைக்கப்பட்ட நெற்படி காசுகள் வழங்கப்பட்டது.

News April 14, 2024

சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக பிரச்சாரம்

image

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக நேற்று சமூக ஆர்வலர்கள் க.முனிவேல், ஆதிமூலம், ஆகியோர் தருமபுரி நகரம் முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது; 1000000 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக பிரச்சாரம் செய்கிறோம் என்றனர்.

News April 13, 2024

தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் பிற பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பதிவுள்ள அலுவலர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் சிறப்பு வாக்குப்பதிவு மையம் வசதி உள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!