India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி ஆகிய இடங்களில் ஏப்ரல் 1 முதல் 30ம் தேதி வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆம்னி பஸ், சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது, உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிய வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் என 125 வாகனங்களுக்கு ரூ.6,53,000 லட்சம் அபராதம் விதித்துள்ளார்.
தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் 4 ஆம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை(மே 9) முதல் 21 ஆம் தேதி வரை நீச்சல் பயிற்சி நடைபெறுகிறது. நீச்சல் பயிற்சி கட்டணம் ரூ.1,770 ஆகும். இதற்கான விண்ணப்பத்தை நீச்சல் குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பாப்பிரெட்டிப்பட்டி, அருகே மெணசியை சேர்ந்தவர் அமல்ராஜ்(35). இவர் நேற்று முன்தினம்(மே 7) இரவில் தன் நண்பருடன் வெங்கடசமுத்திரத்திலுள்ள டாஸ்மாக்கில் மது வாங்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது சிலர் வரிசையில் நிற்காமல் மது வாங்கியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அமல்ராஜை பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சென்னப்பன் பாட்டிலாம் குத்தியுள்ளார். புகாரின் பேரில் நேற்று(மே 8) சென்னப்பனை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி நகராட்சி உழவர் சந்தைக்கு பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று(மே 8) இந்த சந்தையில் அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளிடம் அரசு முதன்மைச் செயலாளர் குறைகளை கேட்டு அறிந்தார். உடன் அதிகாரிகள் இருந்தனர்.
தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட மருதம் நகரில் ஆழ்துளை கிணறு தூர்வாரி சிறு மின்விசை பம்பு அமைத்து குடிநீர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவதை அரசு முதன்மை செயலாளர்/ தொழிலாளர் நல ஆணையர்/தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முன்னிலையில் இன்று பிற்பகல் ஆய்வு மேற்கொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
தருமபுரி, காரிமங்கலம் வட்டம், வகுரப்பம்பட்டி தரப்பு, EB மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 2 பசு மாடுகள் மீது, இன்று(மே 8) பலத்த காற்று அடிக்கும் போது மின் வயர் அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியதில் இரு பசு மாடுகளும் உயிரிழந்தன. இது குறித்து கால்நடை துறையினரும், மின்வாரியத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி, தகடூர் எனும் ஊரில் அதியமான் கோட்டை அமைந்துள்ளது. இதில் காலபைரவர் கோயில், சோமேசுவரர் கோயில், சென்னராயப் பெருமாள் கோயில் ஆகியவை உள்ளன. இங்கு நடத்திய அகழ்வாய்வில், கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், வர்ணமிட்ட பானை ஓடுகள், வில் அம்பு போன்ற கீறல்கள் உள்ள பானை ஓடுகள், சுடுமண் மணிகள், இரும்பு ஆணிகள், போன்றவை கிடைத்தன. இவற்றின் காலம் கி.மு.100 முதல் 300வரையிலான காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, உயர்கல்வி வழிகாட்டலுக்கான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நாளை (மே 9) காலை 9.30 மணி அளவில் தருமபுரி – பென்னாகரம் சாலையில் உள்ள, விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலை அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்பெறுமாறு தருமபுரி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்க நிலையில் நேற்று(மே 7) மாலை வெயில் தாக்கம் மிக குறைந்த அளவே காணப்பட்டது. இந்நிலையில் இன்று(8.5.2024) அதிகாலை 4 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் மேகங்கள் திரண்டு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியில் பொதுமக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளின், மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிநாட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 30 – 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி தருமபுரி உட்பட 12 மாவட்டங்களில் இன்று(மே 8) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.