India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி, தோக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கமாம்மாள் என்ற மூதாட்டி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 19A பஸ் ஏறி தருமபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட்க்கு வந்தவர் மீண்டுமட் வீடு திரும்பவில்லை. எனவே இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் A. சந்திரா மேரி என்பவருக்கு 9940420996 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
நல்லம்பள்ளி மானியத அள்ளி ஊராட்சி ஜருகு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மேல் பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் S.பிரதீப் குமார் 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்தார். மேலும் பூரிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் +12, 10, பொது தேர்வில் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏரியூர், வெள்ளமன் காடு பகுதியை சேர்ந்த தம்பதி ராஜீ, வளர்மதி(55). இவர்களுக்கு 3 மகன் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்களது இரண்டாவது மகன் ரத்தினவேல், வளர்மதி யிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்து, வீட்டில் இருந்த மரப் பொருட்களுக்கு தீ வைத்துள்ளார். அதனை தடுக்க முயன்ற தாய் வளர்மதியை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் பெரும்பாலை போலீசார் நேற்று ரத்தினவேலை கைது செய்தனர்.
கோபாலபுரத்தை சேர்ந்த தம்பதி தனசேகரன், யாசின். மகள்கள் ஷாந்தினி, ஷபானா. நேற்று யாசின் நுங்கு வாங்கி வந்ததாக கூறப்படுகிறது அதற்கு தனசேகரன் எதற்கு அதிகமான நுங்கு வாங்கினாய் என கேட்டு யாசினை கத்தியால் தாக்கி உள்ளார். இதனை தடுக்க முயன்ற ஷாந்தினி க்கும் கத்தி குத்து விழுந்தது. இதனை அடுத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.58% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 83.35 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் தர்மபுரி மாவட்டம் 27ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் 90.45% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.51% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.55% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலையில் இருந்து இன்று(மே 10) அதிகாலை அரூர் நோக்கி வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்து சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி, கடத்தூர் பேருந்து நிலையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற ஒரு கடைக்கும், புது ரெட்டியூர் சாலையில் புகையிலை விற்ற ஒரு கடைக்கும் தலா 25,000 விதம் 50 ஆயிரத்தை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பானு சுஜாதா உத்தரவின் பேரில் , மொரப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நந்தகோபால் இன்று அபராதமாக விதித்தார். உடன் கடத்தூர் காவல் நிலைய போலீசார் இருந்தனர்.
தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை அரங்கில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி கனவு என்ற வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எந்தெந்த படிப்பு படிக்கலாம், எந்தப் படிப்புக்கு கல்லூரியில் அதிக இடங்கள் உள்ளது என்பது குறித்து வல்லுனர்கள் ஆலோசனை வழங்கினர்.
தர்மபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.