India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம காரிமங்கலம் ஒன்றியம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டு உள்ள இண்டமங்கலம் காலணியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில், இப்பகுதியில் ஒரு மாத காலமாக குடிக்கக்கூட தண்ணி இல்லை என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், வள்ளிமதுரை அணைகட்டியில் நேற்று(மே 12) குளிக்க சென்ற ராகுல்(29) என்ற இளைஞர் நீரில் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான குழு தேடுதலில் இறங்கினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் ராகுலை சலடமாக மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
பாலக்கோடு தாலுகா வெள்ளி சந்தை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த ஜூன் 2023ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபருடன் ஆந்திராவில் குடும்பம் நடத்தினார். சிறுமி கர்ப்பமான நிலையில், அவரை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு இளைஞர் தலைமறைவானார். சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிந்த போலீசார், இளைஞரை தேடி வருகின்றனர்.
காரிமங்கலம் அடுத்த அண்ணாமலை அள்ளிப் பகுதியை சேர்ந்த சங்கரன் (52), பழ வியாபாரி. இவர் நேற்று டூவீலரில் பாலக்கோடு செல்லும்போது எலுமிச்சனஹள்ளி அருகே நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்தார். பின்னர் அவரை மீட்டு பாலக்கோடு ஜிஹெச்-க்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளனது. அதன்படி தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
பாலக்கோட்டை சேர்ந்த பழ வியாபாரி அயூப்(55) என்பவர் தனது டூவீலரில் இன்று சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே பைக்கில் வந்த கொட்டா பள்ளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மணிகண்டன் இவர் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் இருவரையும் பாலக்கோடு ஜிஹெச்-சில் சேர்த்தனர். அங்கு அயூப் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த முடிந்த 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் 9270 பேர், மாணவிகள் 9409 பேர் என மொத்தம் 18679 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 89.46% தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 1.01% அதிகரித்துள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2024-2025ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள், <
Sorry, no posts matched your criteria.