India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளராக போட்டியிட்ட சௌமியாஅன்புமணி சவுல்பட்டி, சின்னக்காம்பட்டி, ஏறுபள்ளி, எச்சனஅள்ளி, கருபைநஅள்ளி, பிஎஸ்.அக்ரஹாரம், பள்ளப்பட்டி ஆகிய 27 பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என பாமக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று (ஜூலை 15) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில், இலவச பட்டா, வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி, உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து 549 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தர்மபுரியில் மாவட்டத்திலும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
பாலக்கோடு அருகில் இன்று மாலை 5.30 அளவில் சுகர் மில் அருகில் 2 பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டு தருமபுரி மற்றும் பாலக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ தடங்கம் சுப்பிரமணிய ஐயோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீர் திறப்பின் போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரையை கடக்கவும், கால்நடைகளை ஆற்றங்கரைக்கு கொண்டு செல்வதை தவிர்க்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு செல்லும் வழியில் கோவிலூர் பஸ் நிறுத்தம் அருகில் இரண்டு தனியார் பேருந்துகள் இன்று விபத்துக்குள்ளானது. இந்நிலையில் காயமடைந்தவர்களை திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி மற்றும் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். ஆ. மணி பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் , மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினர்.
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேற்று(ஜூலை 15) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடன் தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று(ஜூலை 15) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்த அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) தனப்பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 901 மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் பி.பள்ளிப்பட்டி செயின் மேரிஸ் துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் எம் பி மணி ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர். மேலும், ஆட்சியர் மாணவர்களுக்கு உணவு பறிமாறினார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தர்மபுரி தொகுதி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜிகே மணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ வேலுசாமி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.