Dharmapuri

News July 17, 2024

தருமபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 17, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

image

பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி 21,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் நிலவரப்படி ஆயிரம் கன அடி அதிகரித்து 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் மெயின் அருவி, ஐந்தருவி, சீனி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

News July 17, 2024

தர்மபுரி:மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 10 பேர் கைது

image

தர்மபுரி மாவட்டத்தில் சந்து கடைகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசு பாதத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள மதுவிலக்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மதுவிலக்கு பிரிவு காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <>ஆன்லைனில்<<>> வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

14 தாசில்தார்கள் பணி இட மாற்றம்

image

தர்மபுரி மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாப்பிரெட்டிபட்டி, நலம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய 14 தாசில்தார்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 17, 2024

நன்றி தெரிவித்த தர்மபுரி எம்.பி.

image

தர்மபுரி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மணி வெற்றி பெற்றார்.அவர், ஓட்டளித்த மக்களுக்கு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த லளிகம், மிட்டாநுாலஹள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, நார்த்தம்பட்டி, குட்டூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

News July 16, 2024

விபத்து காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் நேற்று எதிர்பாராதவிதமாக இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த 25 நபர்கள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 1 இலட்சம் வீதம் ரூ.25 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

News July 16, 2024

ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

image

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று முதல் நேர்முகத் தேர்வின் காலை நிலவரப்படி 20,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்லவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் மறு உத்தரவு வழங்கும் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, உத்தரவிட்டுள்ளார்.

News July 16, 2024

புதிய வட்டாட்சியர்கள் நியமனம்: மாவட்ட ஆட்சியர்

image

தர்மபுரி மாவட்டத்தில் 14 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதில், பென்னாகரம் வட்டாட்சியர்களாக தர்மபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லட்சுமி பெண்ணாகரம் தாசில்தாராகவும், ஆறுமுகம், பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

error: Content is protected !!