India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு நேற்று ( ஜூலை 18 ) பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,425 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.460-க்கும், குறைந்த பட்சமாக ரூ.242-க்கும், சராசரியாக ரூ.400.44-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5,71,002-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் ஜூல் ஓரம் மற்றும் NCST உறுப்பினர் நிருபம் ஆகியோரை தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேற்று நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது குறும்பர், லம்பாடி இனமக்களை பழங்குடி பட்டியலில் இணைக்க 17வது மக்களவையில் தனி நபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினார்.
அரசு மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2.5 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு அமைக்கப்படும் ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் 3 தொழிற்கூடங்களுடன் அமைக்கப்பட வேண்டும் எனவும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணிநூல் துறை துணை இயக்குநர் அலுவலகத்தை அனுகலாம் என தெரிவித்துள்ளார்.
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் வசமுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேற்று வெளியிட்டுள்ள தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள உத்தரகன்னடாவில் பெய்த் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த மண்சரிவில் 9க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் புதைந்துள்ளனர்.தற்போது தருமபுரி மாவட்டத்தை டேங்கர் லாரி ஓட்டுநர் முருகன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனர்கள் சின்னன்ணன், முருகன் மண் சரிவில் சிக்கி இறந்துள்ளனர். தர்மபுரியை சேர்ந்த முருகன்,நாமக்கல்லை சேர்ந்த சின்னன்ணன் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று ஜூலை 17 பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட முழுவதும் 31 காவல் நிலையங்களிலிருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பெறப்பட்ட 75 மனுக்கள் பெறப்பட்டு.அதில் 73 மனுக்கள் மீது உடனடியாக விசாரணை முடித்து வைக்கப்பட்டது
தர்மபுரி மக்களவை தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி தருமபுரியில் உள்ள அதகபாடி, செக்காரபட்டி உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு நேற்று நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,ராமதாஸ் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு போராடி சாதித்ததைப் போல காவிரி உபரி நீர் திட்டத்தை பாமக கொண்டு வரும் எனத் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. பள்ளிப்படிப்பு முதல் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு ஆட்கள் தேவை என தனியார் துறை நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.