Dharmapuri

News July 22, 2024

மின் கட்டண உயர்வு கண்டித்து மனு

image

தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் வி புகழ் தலைமையில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்களிடம் மின்சாரம் உயர்வு  கட்டணத்தை கண்டித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் திரு ஜெகதீசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு மாதையன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சங்கர் கணேஷ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ்  நிர்வாகிகள் பாபு கார்த்திக் அருண் உடன் இருந்தனர்.

News July 22, 2024

ரூ.8 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனை

image

இன்று காரிமங்கலம் வார சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளான போச்சம்பள்ளி, காவேரிப்பட்டினம், குடிமேனஅள்ளி , பாரூர் பகுதிகளில் இருந்து சுமார் 1 லட்சம் தேங்காய் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ரூ.7 முதல் 11 வரையிலான விலையில் தேங்காய்கள் விற்கப்பட்டன. மொத்த விற்பனை ரூ.8 லட்சமாக இருந்தது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

News July 22, 2024

தர்மபுரியில் ஆட்சியர் ஆய்வு

image

ஜூலை 22 நல்லம்பள்ளி வட்டம், வள்ளல் அதியமான் கோட்டத்தின் முன்புறத்தில் உள்ள இடத்தில் தொல்லியல் துறையின் மூலம் நடுகற்கள் அகழ்வைப்பகம் அமைப்பதற்கு அரசு ஆணை வரப்பெற்றுள்ளது. இங்கு ஆய்வு செய்த ஆட்சியர் தொடர்ந்து தருமபுரி நகரப்பகுதியில் உள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். 

News July 22, 2024

26ஆம் தேதி முக்கிய கூட்டம்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டம் விவசாயிகள் குறித்திருக்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் அரங்கில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சார்ந்த குறைகளையும் கருத்துக்களையும் கூறி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News July 22, 2024

தருமபுரியில் நாளை அதிமுக ஆா்ப்பாட்டம்

image

தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாளை (ஜூலை 22) தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், ஊராட்சி, கிளை நிா்வாகிகள், உள்ளாட்சி, கூட்டுறவு பிரதிநிதிகள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

News July 21, 2024

தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் தீவிரம்

image

 கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இன்று(ஜூலை 21) தீயணைப்பு பணியாளர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தொடர்ந்து பொது மக்கள் நடமாட்டத்தை கவனித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 21, 2024

ஒகேனக்கலுக்கு 86,000 கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு

image

பென்னாகரம் தொகுதி ஒகேனக்கல்லில் 70 ஆயிரம் கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று மாலை நிலவரப்படி 86000 கன அடி அதிகரித்துள்ளது. மேலும் சினி அருவி, ஐந்து அருவிகளில் தண்ணீர ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவேரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 21, 2024

தருமபுரியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 21, 2024

தர்மபுரி மாவட்டத்தில் 13.7 செ.மீ மழை

image

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 13.7 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

334 காவலர்கள் பணியிட மாற்றம்

image

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு பிரிவு உள்ளிட்ட 33 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 ஆண்டுகள் பணி செய்து நிறைவு பெற்ற காவலர்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள். இந்த நிலையில் நேற்று 33 காவல் நிலையங்களில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றிய 334 காவலர்கள் மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

error: Content is protected !!