Dharmapuri

News July 26, 2024

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரான்சிஸ் ராஜ்குமார் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

News July 26, 2024

தருமபுரி பள்ளி கல்லூரி விடுமுறை ஆட்சியர் தகவல்

image

தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18 ஆம் நாளான 03.08.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

தொப்பூர் மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணி கலெக்டர் ஆய்வு

image

நல்லம்பள்ளி வட்டம், தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை பாளையம் சுங்கச்சாவடியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குநர் சீனிவாசலு, நல்லம்பள்ளி வட்டாட்சியர் உடன் இருந்தனர்.

News July 26, 2024

அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ

image

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த ஆர். சின்னசாமி அதிமுகவிலிருந்து விலகி பாஜக-வில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று(ஜூலை 25) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பாஜகவிலிருந்து பிரிந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதில், தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன் , எஸ்.பி. வேலுமணி ஆகிய முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News July 26, 2024

தருமபுரி மாணவர்கள் கவனத்திற்கு

image

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி முகாம் தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்றும், நாளையும் நடக்கிறது. 2023, 2024 கல்வியாண்டில் பிளஸ்2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் <>https://registrations.hcltechbee.com/<<>> என்ற தளத்தில் பதிவு செய்யலாம். பயிற்சியின் போது ஓராண்டுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 26, 2024

உணவுப் பொருட்கள் தொடர்பான புகார் அளிக்க புதிய வசதி

image

தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் தொடர்பான புகார் ஏதேனும் இருப்பின் 94440 42322 என்ற whatsapp எண்ணிற்கும், TNFoodsafetyconsumerApp என்ற செயலிக்கும் மற்றும் foodsafety.tn.gov.in என்ற இணையதளத்தில் புகார்கள் தெரிவிக்கலாம் என்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாக பால் குளிரூட்டும் நிலையத்தில், புதிய 50000 லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கடந்த 11ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார்.

News July 25, 2024

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாலை 4.30 மணி நிலவரப்படி வினாடிக்கு 38 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஒகேனக்கல் இன்று இரவு 9.30 மணி நிலவரப்படி வினாடிக்கு 56 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

News July 25, 2024

தர்மபுரி எஸ்பி இடம் வாழ்த்து பெற்ற காவல் ஆய்வாளர்

image

தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த காவல் நிலையங்களில் 17வது இடத்தை பிடித்த அரூர் காவல் நிலையத்திற்கு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களால் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தக் கோப்பையை பெற்ற அரூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் ராஜ் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News July 25, 2024

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கிய எம்பி

image

தர்மபுரி எம்பி ஆ .மணி இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-ஐ டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். பாலக்கோடு வட்டம் ஜோதி அள்ளி பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே தரைப்பாலம் அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவது &
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்மனூரில் செயல்பட்டு வந்த ரயில் நிலையம் மூடப்பட்டதை மீண்டும் திறக்கவும் மனு வழங்கினார்.

error: Content is protected !!