Dharmapuri

News July 31, 2024

தொப்பூர் டிராக்டர் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

image

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் பகுதியில் மண் ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து கோவிந்தன்(24),  சுதாகர் (23) என்ற அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நேற்று உயிரிழந்துள்ளனர்.  தொப்பூர் காவல் துறையினர் இவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 31, 2024

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை

image

தர்மபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் , விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதில் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News July 31, 2024

தர்மபுரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ரிவார்ட் பாயிண்ட்ஸ் தருவதாக உங்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் இமெயிலில் வரும் லிங்குகள் மற்றும் செயலிகளை நம்பி உங்கள் விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதின் மூலம் பண இழப்பு ஏற்படக்கூடும் என தர்மபுரி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 எண்களை அழைக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 30, 2024

73 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல்

image

தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி வட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 74 பேருக்கு பொது கலந்தாய்வு மூலம் பொது மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. காரிமங்கலம் வட்டத்தில் மட்டும் 19 கிராம நிர்வாக அலுவலர்கள் பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 30, 2024

இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

News July 30, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 2.08.2024 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

ஒகேனக்கல் அருவி நீர் வரத்து குறைவு

image

காவிரி ஆற்றில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24,000 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து மத்திய நீர் வளத்துறை அலுவலர்கள் நீரின் அளவை கணக்கிட்டு வருகின்றனர்.

News July 30, 2024

திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1330 திருக்குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ. 15,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

தவறுதலாக பூச்சி மருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு

image

அச்சல்வாடி அடுத்த கூக்கடபட்டியை சேர்ந்த விவசாயி பரமசிவம். இவர் நேற்று மது போதையில் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரமசிவம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கோபிநாதம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 30, 2024

பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 7500 வரை ஏலம்

image

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று(ஜூலை 29) பருத்தி ஏலம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்காக கொண்டு வந்த நிலையில், எம் சி 5 ரக பருத்தி குவிண்டால் 6,889 ரூபாய் முதல் 7,499 வரை ஏலம் போனது. மேலும், நேற்று ஒரே நாளில் 21 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானதாக வேளாண் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!