India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரியில் இன்று (நவ.25) திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, பட்டா பெறுதல், சிட்டா பெயர் மாற்றம், வீட்டுமனை பட்டா வழங்குதல், குடும்ப அட்டை வேண்டி, முதியோர் உதவித்தொகை, மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வேண்டி மொத்தம் 627 மனுக்களை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பெற்றுக் கொண்டார்.
தர்மபுரி காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “போலியான Customer Care எண்களை நம்ப வேண்டாம், தங்களுடைய பாஸ்வேர்ட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வங்கி கணக்கு விவரம் போன்றவற்றை பகிர வேண்டாம். மேலும் தொடர்புக்கு 1930 எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும், புகார்களை தெரிவிக்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் நவ.29ஆம் தேதி அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய இடங்களில் வட்டார மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட காவலர்கள் மருத்துவமனை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரிமங்கலம் தலைமை அலுவலகத்தில் நவ.25 ஆம் நாள் காலை 11.00 மணிக்கு திமுக சார்பு அணிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் இன்று தெரிவித்துள்ளார்.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் திருத்தல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் இன்று கடைசி நாளாக நடைபெறுகிறது. மேலும், நேற்று நடைபெற்ற முகாமில் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 5,595 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் இன்று தகவல் தெரிவித்துள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் voterHelpline என்ற கைப்பேசி செயலி (mobile App) மூலமாகவும் விண்ணப்பங்களை அளிக்கலாம். 17 வயது முடிவடைந்த நபர்களுக்கு தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் 2001-2010 காலகட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த 18 வயது முடிந்தவருக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படுகிறது. பயனாளிகள் அந்தந்த வட்டார அலுவலகங்கள் மூலம் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகி முதிர்வு தொகையை பெறலாம். அணுக வேண்டிய முகவரி சமூக நலஅலுவலகம், கூடுதல் கட்டிட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், தர்மபுரி மாவட்டம். மேலும் 04342-233088 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.