Dharmapuri

News August 5, 2024

தர்மபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், வெப்பச் சலனம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News August 5, 2024

திமுக மகளிர் அணிக்கு மா.செயலாளர்கள் அழைப்பு

image

தருமபுரி ஜோதி மஹால் திருமண மண்டபத்தில்  தருமபுரி மாவட்ட தி.மு.க
மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை(ஆக 6) காலை 09.00 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன் தெரிவித்துள்ளனர்.

News August 5, 2024

தருமபுரியில் நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நெசவாளர் கூட்டுறவு சங்கம் வளாகம் பகுதியில் நடைபெறுகிறது. மேற்கொண்ட மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தர்மபுரி ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். சேர் செய்யவும்.

News August 5, 2024

தர்மபுரி மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

image

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு கல்லூரியில் பயின்று வரும் தகுதியான மாணவர்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும், வங்கி கணக்கில்லாத மாணவர்களும், வங்கி கணக்கு வைத்திருந்து செயல்பாட்டில் இல்லாத மாணவர்களும் தங்களுடைய கல்லூரிகள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை என அணுகலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

”SEED” திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

image

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு ”SEED” என்ற திட்ட மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

பென்னாகரம் தொகுதியில் வார்டு உறுப்பினர் ஆய்வு 

image

பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் கெண்டையணள்ளி ஊராட்சியில் உள்ள புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் 4.5 லட்ச மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்று சுவர் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதை நேரில் சென்று ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேவராஜ் இன்று ஆய்வு செய்தார். ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

News August 4, 2024

தருமபுரி தன்னார்வலர்கள் வயநாட்டிற்கு உதவி

image

ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவி பொருட்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் பொருட்களை வயநாடு மாவட்டத்தில் உள்ள முட்டில் பஞ்சாயத்து, மணந்தவாடி நகராட்சி ஆகிய இடங்களில் உள்ள மூன்று முகாம்களுக்கும் நேரில் சென்று நானூறு குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவி பொருட்களை தருமபுரி தன்னார்வலர்கள் இன்று வழங்கினர்

News August 4, 2024

தர்மபுரி கம்பைநல்லூர் டூவீலர் திருடியவர் கைது

image

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதி சேர்ந்த சுமதி என்பவரின் டூவீலர் கடந்த ஆகஸ்ட்-1ல் மர்ம நபரால் திருடப்பட்டது. புகாரின் பேரில் எஸ்.ஐ.யோக பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இன்று கடம்பர அள்ளி பகுதி சேர்ந்த சுகுமார்(20) என்பவர் கைது செய்தனர்.பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 4, 2024

தர்மபுரியில் இரவு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் இன்றிரவு 8.30 மணி வரை லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இன்று வரை 51% கூடுதல் மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்துள்ளது.

News August 4, 2024

பிள்ளைகளை ராணுவத்திற்கு அனுப்பினால் பதக்கம்

image

மாவட்டத்தில் தங்களது ஒரே மகனை ராணுவத்திற்கு அனுப்பி வைத்திருந்தால் பெற்றோருக்கு 20000 & வெள்ளிப்பதக்கமும், குடும்பத்தில் 2 அல்லது 2க்கு மேற்பட்ட மகன்கள் & மகள்களை ராணுவத்திற்கு அனுப்பி வைத்திருந்தால் 25000 & வெள்ளி பதக்கமும் வழங்கப்படும். மேலும், போர் பணி ஊக்க மானியம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் என ஆட்சியர் சாந்தி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

error: Content is protected !!