India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட கண்காணிப்பாளர்களை இடமாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த ஸ்டீபன் ஜேசுபாதம் இடமாற்றம் செய்யப்பட்டு, தருமபுரி மாவட்டத்தின் புதிய எஸ்.பி-ஆக சென்னை துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் பாலக்கோடு எம்.எல். கேபி அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர, இணைய வழியில் விண்ணப்பித்து அதற்கான இரண்டு கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்தன. இந்நிலையில், பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து உடனடித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்காமல் நேரடியாக கல்லூரிகளில் சேர 3ஆம் கட்ட கலந்தாய்வு இன்று (8ஆம் தேதி) நடைபெற உள்ளது. மாணவரகள் இதனை பயன்படுத்தி பயன்பெறவும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழையே பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 8.8.24 இன்று குண்டலப்பட்டி அரங்கநாதன் – ரஞ்சிதம்மாள் திருமண மண்டபத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தர்மபுரி வந்ததையொட்டி பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கேபி அன்பழகன் மலர் கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.
தர்மபுரி மாவட்டத்தில் நிலக்கடலை பயிர்களை தற்போது அதிகளவில் தாக்கும் புரோனியா புழுவினை கட்டுப்படுத்த ஆமணக்கு செடி வயலின் ஓரத்தில் நடவு செய்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும் நச்சு கவர்ச்சி உணவு உருண்டைகளாக செய்து மாலையில் வயலிலும் வரப்பிலும் வைத்து வளர்ந்த புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம் என வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று பச்சை மிளகாய் கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 08) உழவர் சந்தையில் பச்சை மிளகாய் வரத்து சரிவு காரணமாக ரூ.65 வரையும் வெளி சந்தையில் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தக்காளி, கத்திரிக்காய், பீன்ஸ் போன்றவை விலை குறைந்துள்ளது.
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் லும்வேர்ட்ஸ் விற்பனை வளாகத்தில் கைத்தறி மற்றும் ஜவுளிகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து பார்வையிட்டார். உடன் சேலம் சரக கைத்தறி துறை உதவி அலுவலர் விஜயலட்சுமி, நகர்மன்ற தலைவர் லட்சுமி, நாட்டான்மாது கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.
10ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் லலிகம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் கைத்தறி துறையால் நெசவாளர்களுக்கான செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் தொடர்பான கையேடுகளை மாவட்ட ஆட்சியார் சாந்தி இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்களின் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் இன்று தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் இன்று நடைபெற்றது. மக்கள் தங்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 90 மனுக்கள் பெறப்பட்டு 90 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.