India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் ரூ. 2.52 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டா மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் மூலமாக தீர்வு காணப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று(ஆக 9) வழங்கினார். இந்நிகழ்வில் கலெக்டர் சாந்தி, எம்பி மணி, மு. அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமை வேலைநாள் ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலை நாள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாளை தருமபுரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் குமரவேல் உடல் நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், குமரவேலின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார். இதில் பாமக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
தொப்பூர் கணவாயில் தினம்தோறும் நடக்கும் விபத்துகளை தடுக்கும் வகையில் 6.6 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.905 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ள நிலையில்
அப்பணியினை விரைந்து முடித்திடக்கோரி தர்மபுரி எம்பி ஆ.மணி,மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
நிதின் கட்கரியை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி நரிப்பள்ளி மாணவி R. ராகவி அவர்கள் கால்நடை மருத்துவ படிப்பு (7.5 இட ஒதுக்கீடு) தரவரிசை பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அந்த மாணவிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.இன்று உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என கமெண்டில் குறிப்பிடவும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மாவட்டம்,மண்டல,மாநில அளவில் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை https://sdat.tn.gov.in இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற எண்ணை அழைக்கவும் என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பென்னாகரம் வட்டம், சிகரலஅள்ளி இருளர் கொட்டாய் காலனியில் PM JANMAN திட்டத்தில் கட்டப்பட்டு வரும் 28 வீடுகளின் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் தரமாகவும், விரைவில் முடிக்கவும் அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், இருளர் கொட்டாய் காலனி மக்கள் இடையே குறைகளையும் கேட்டறிந்தார்.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.