India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தமிழக அரசு நடத்தும் திருக்குறள் போட்டிகளுக்கு தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருக்குறள் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் படைப்புகளை 18 ஆம் தேதிக்குள் tndiprmhkural@gmail.com என்ற இணையதளக் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக, இலக்கியம்பட்டி, ராமியனஅள்ளி, பாரதிபுரம் உங்கரானஅள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவேரிபுரம், வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 5மணி வரையும் அரூர், எட்டிப்பட்டி, அழகிரிநகர், பெத்தூர், சந்தைப்பட்டி, அச்சல்வாடி, ஓடசல்பட்டி, சின்னகுப்பம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவம் உதவியாளர் பணிகளுக்கு நாளை(டிச 7) காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த நேர்முகத் தேர்விற்கு கலந்து கொள்பவர்கள் அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பு கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 89 259 40856 89259 40858 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்கு கைப்பற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 91 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 95 வாகனங்கள் டிச 18ஆம் தேதி காலை 8 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து விருப்பமுடியவர்கள் பத்தாயிரம் முன் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம் என தர்மபுரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமூக நீதி, சமத்துவத்தை காத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று அவரின் நினைவை போற்றி புகழ்வோம் என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், ஜோதிமஹாலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி கலந்துகொண்டார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி, எம்எல்ஏ ஜிகே மணி, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஃபெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு ‘சிறப்பு சிறு வணிக கடன்’ திட்டத்திற்கான முகாம் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடன் முகாம் நடைபெறும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்.தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நாளை மின் பராமரிப்பு பணி காரணமாக, இலக்கியம்பட்டி, ராமியனஅள்ளி, பாரதிபுரம், உங்கரானஅள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவேரிபுரம், வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 5மணி வரையும் அரூர், எட்டிப்பட்டி, அழகிரிநகர், பெத்தூர், சந்தைப்பட்டி, அச்சல்வாடி, ஓடசல்பட்டி, சின்னகுப்பம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நாளை முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிறு வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டவே இந்த முகாம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.