Dharmapuri

News December 16, 2024

இலவசமாக கோமாரி தடுப்பூசி: ஆட்சியர் தகவல்

image

கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி தடுப்பூசி போட்டு பயன்பெறலாம். விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகியும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 9445001113, 9445032563, 9443077435, 8144874747 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

கடந்த 5 ஆண்டுகளில் 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 84 ஆயிரத்து 513 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 88 ஆயிரத்து 185 பேர் பெண்கள். 2,140 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். பதிவு செய்தவர்களுக்காக தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் இதுவரை 11 ஆயிரத்து 700 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

கம்பீர புஷ்கர் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்

image

2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ள கம்பீர புஷ்கர் விருதிற்கான தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. இதற்காக https://awards/tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளை(டிச 15) கடைசி நாளாகும். மேலும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

கோமாரி நோய் தடுப்பூசி: ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் டிச.16ஆம் தேதி முதல் ஜன.05ஆம் தேதி வரை 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.

News December 13, 2024

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து தருமபுரி எம்.பி கேள்வி

image

 மக்களவையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து தருமபுரி எம்.பி ஆ.மணி கேள்வி எழுப்பினார். இதில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY) கீழ் தகுதியான நபர்கள் பலன் பெறுவதை அரசு உறுதி செய்துள்ளதா என்பது குறித்தும், மேலும் இது போன்ற பல்வேறு கோரிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

News December 13, 2024

விவசாயிகளுக்கு வழங்க 12,153 டன் உரங்கள் இருப்பு: அதிகாரி தகவல்

image

 அண்மையில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு மழை சராசரியை விரைவில் எட்டும் வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 12,153 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயிர் விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என வேளாண்மை துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

News December 13, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 13, 2024

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேளாண் இயக்குனர் உத்தரவு

image

தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராமங்களும் வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் திட்டப்பணிகள் அனைத்தும் விரைவு முடிக்குமாறு தருமபுரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தோட்டக்கலைத் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

20 % கூடுதல் மானியம் : ஆட்சியர் அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கிட 20 % கூடுதல் மானியமாக ரூ.48,000 விசைகளை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200 வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பவர் டில்லர் வாங்கிட அதிகபட்சமாக ரூ.1,68,000 விசைகளை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.88,200 வரை மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று தெரிவித்தார்.

News December 12, 2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்திற்கான முகாம் பென்னாகரம் வட்டத்தில் வரும் டிச.18ஆம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் டிச.19ஆம் தேதி காலை 9.00 மணி வரை நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.

error: Content is protected !!