Dharmapuri

News August 20, 2024

தருமபுரியில் இன்று மின்தடை அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்கள், தருமபுரி வெள்ளிச்சந்தை துணை மின் நிலையம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரைப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த மூன்று துணை நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மின்விநியோகமானது இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நிறுத்தப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர்கள் முத்துசாமி, இந்திரா தெரிவித்துள்ளனர்.

News August 20, 2024

வயநாடு பேரிடர் நிதி; அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேர்ப்பு

image

கடத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அன்பழகன் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு பொது நூலக துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனுசியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நேற்று கடத்தூர் த தென்கரைக்கோட்டை காந்திநகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வயநாடு பேரிடர் நிதி சேர்த்தனர்.

News August 19, 2024

தர்மபுரியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

News August 19, 2024

தர்மபுரியில் கல்விகடன் முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

நல்லம்பள்ளி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்விக்கடன் முகாம் வருகின்ற 22.08.2024 அன்று நடைபெற உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், நர்சிங், பார்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு

News August 19, 2024

தருமபுரி ஆட்சியர் அலுவகலத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News August 19, 2024

ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

image

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் மருதாசல மூர்த்தி என்பவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் டெல்லியில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 19, 2024

தருமபுரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தருமபுரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தென்கரைக்கோட்டை, கோபிநாதம்பட்டி, கூட்டோடு, பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

News August 18, 2024

மாணவிகள் விடுதியினை ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில், விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்தும், உணவு சமைப்பதற்கு வழங்கப்படும் பொருட்களின் இருப்பு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி, இ.ஆ.ப அவர்கள் இன்று (18. 08. 2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தே. சாந்தி இருந்தார்.

News August 18, 2024

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை கலந்தாய்வு

image

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நிழல் கல்வியாண்டில் முதுநிலை பட்ட மேற்படிப்பில் அனைத்து பட்ட பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற உள்ளது. எனவே பட்ட மேற்படிப்பில் சேர்க்கை கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் உரிய சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News August 18, 2024

தருமபுரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. நாளை கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!