India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு மருத்துவமனை முன்பு சந்தேகப்படும்படி இருந்த சக்திவேல், பரத், விநாயகம் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
மேற்கு மண்டலத்திற்கு புதிதாக பொறுப்பேற்று கொண்ட மேற்கு மண்டல காவல்துறை தலைவர் T.செந்தில்குமார் தருமபுரி மாவட்ட ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டு கவாத்து அணிவகுப்பை பார்வையிட்டு, காவலர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார். மேலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் தருமபுரி எஸ்.பி உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகரநல அலுவலர் தாமரைக்கண்ணன் உட்பட துறை தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி நகராட்சி சார்பாக அழகாபுரியில் உள்ள நகர்ப்புற வீடு அற்றவர்களுக்கான தங்கும் விடுதியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகர நல அலுவலர் தாமரைக்கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி ஒட்டப்பட்டியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் 400க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் குடிநீர் இணைப்பினை வழங்கி மாணவர்களின் பயன்பாட்டிற்கு நீர் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கி . சாந்தி இன்று (24.08.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்..
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 62,000 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பிளஸ்- 2 படிப்பை முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வியில் தங்கள் விருப்பம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் எந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் திறன் பயிற்சி மூலம் அளிக்கப்படுகிறது.
தர்மபுரி 4 ரோடு பகுதியில் செயல்படும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் நேற்று 2022 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து ஒரு கிலோ பட்டுக் கூடுகள் அதிகபட்சமாக 1 கிலோ 523 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 1 கிலோ 346 ரூபாய்க்கும், 1 கிலோ சராசரியாக 460 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் நேற்று 9,31,574 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணிகளை சிறப்பாகவும் விரைவாகவும் துரிதமாகவும் முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிகளுக்கு வரும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அவர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, தலைமையில் இன்று ஆகஸ்ட் 23 நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை ரவி, விவசாயி சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (23.08.2024) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்னிந்திய கரும்பு மற்றும் சர்க்கரை தொழில்நுட்ப வல்லுநர்கள் அமைப்பால் 53-ஆம் ஆண்டு மாநாட்டில் 2023-24-ம் ஆண்டு அறவைப் பருவத்தில் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறனுக்கான தங்க விருது கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்டதை ஆட்சியர் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.