Dharmapuri

News April 8, 2024

தருமபுரி அருகே பாமக கிளை கூட்டம்

image

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஊராட்சியில் உள்ள ஜீவா நகர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் ஜீவா நகர் கிராமத்தை சேர்ந்த அனைவரும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் அனைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 7, 2024

தர்மபுரி மாவட்டத்தில் மழையா..?

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

தருமபுரி: மீன் வியாபாரம் செய்து வாக்கு சேகரிப்பு

image

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் ஒட்டப்பட்டியில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மணி மீன் வியாபாரம் செய்து வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் கட்சியினை கலந்து கொண்டனர்.

News April 7, 2024

தருமபுரியில் அன்புமணி பிரச்சாரம்

image

தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஏப்.7) பிரச்சாரம் மேற்கொள்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக, தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்பாளராக களம் காண்கிறார். அவரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்யுவுள்ளார். ஏப்.19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிடுத்துள்ளது.

News April 7, 2024

‘மை தருமபுரி’ அமைப்புக்கு விருது

image

தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளான ஏழை மக்களுக்கு உணவு, இரத்ததானம், ஆதரவற்று இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வது போன்ற சேவைகளை ‘மை தருமபுரி’ செய்து வருகிறது. இதையடுத்து, இந்த அமைப்பிற்கு அசுபா நிறுவனம் சார்பில் ‘சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது’ நேற்று(ஏப்.6)  சென்னையில் வழங்கப்பட்டது.

News April 6, 2024

தர்மபுரி: கொளுத்தும் வெயில்..!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 5, 2024

தர்மபுரி அருகே நாகப்பாம்பு: பொது மக்கள் ஓட்டம்

image

நல்லம்பள்ளி வட்டம் பட்டாகப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரது வீட்டில் ஏப்ரல் 5ஆம் தேதி நாகப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர்  வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர். பாம்பு படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 5, 2024

தருமபுரி: தேசிய நெடுஞ்சாலையில் தீ விபத்து

image

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஏப்.5) காலை 6 மணியளவில் எட்டிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவரின் கார் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழு, தண்ணீரை குழாய் வழியாக பீச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த விபத்தில் காரின் பாதி பகுதி எரிந்து சேதமானது.

News April 5, 2024

தருமபுரி: மாம்பழம் ஏந்தி பிரச்சாரம்

image

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று(ஏப்.5) தருமபுரி ஒட்டப்பட்டியில் சௌமியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அனைவரும் ஆரத்தி எடுத்தும், மாம்பழம் ஏந்தியும் வேட்பாளரை வரவேற்றனர். உடன் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.

News April 5, 2024

அரூர் அருகே அணிவகுத்த போலீசார்!

image

மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பதை உறுதிப்படுதுதம் நோக்கில், அரூர் அடுத்த கம்பைநல்லூர் பகுதியில் நேற்று(ஏப்.4) போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரூர் டிஎஸ்பி ஜெகன்நாதன் தலைமையில், கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன் துவங்கிய அணிவகுப்பு பஸ் ஸ்டாண்ட், காரிமங்கலம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது.