India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 7868881317, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் நாகார்ஜுன் (23). இவர் நேற்று சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் படியில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். விருத்தாசலம் அருகில் சென்ற போது நாகார்ஜுன் ரயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் வட்டம் பிச்சாவரம் பஞ்சாயத்து சேர்ந்த செஞ்சி காலனி கிராமத்தில் மெயின் ரோடு அருகாமிலேயே காலை 6 மணி அளவில் பெண் குழந்தை ஒன்று கன்டுபிடிக்கப்பட்டது. அது முறைப்படி அரசிடம் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் இணையதளம் மூலமாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் 19.10.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக, தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், காரைக்கால் மாவட்டத்திலும் 3,000 ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும், அவற்றை மீட்க கோரியும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காட்டுமன்னார்கோயில் வட்டம், லால்பேட்டையில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் பரவணாறு உபவடிநிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விரால் மீன்குஞ்சு பொரிப்பகத்தில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (05.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
பண்ருட்டியை சேர்ந்த சந்தோஷ் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த +2 மாணவியும் கடந்த 2020ஆம் ஆண்டு காதலித்து வந்தனர். இந்நிலையில் மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் விஷம் அருந்தியுள்ளனர். இந்நிலையில் மாணவி உயிரிழந்தார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் சந்தோஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (04/10/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கவியரசன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ், நெய்வேலி உதவி ஆய்வாளர் ராஜாங்கம், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரம், திம்மராவுத்தன்குப்பம் ஊராட்சியில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள கம்பு வயல் மற்றும் சொட்டுநீர் பாசனத் திட்ட வயல் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (04.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் உடனிருந்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரம், நெய்வேலி மாநில எண்ணெய் வித்து பண்ணையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நொச்சி, ஆடாதொடா நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (04.09.2024) துவக்கி வைத்தார். அப்போது பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.