Cuddalore

News November 11, 2024

கடலூர் சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு

image

கடலூர் மத்திய சிறைச்சாலையில் நேற்று போலீசார் கைதிகளின் அறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு அறையில் செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் கஞ்சா, செல்போன் வைத்திருந்த தண்டனை கைதிகளான சென்னை எழும்பூரை சேர்ந்த நாகராஜன் (35), புவனகிரியை சேர்ந்த மன்சூர் அலி (38) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

News November 10, 2024

பழங்குடியின மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பட்டய கணக்காளர்-இடைநிலை, நிறுவன செயலாளர்-இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனால் பயிற்சி பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.

News November 10, 2024

கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 10, 2024

கடலூரில் ஆட்சிமொழி பயிலரங்கம்

image

கடலூர் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 14.11.2024, 15.11.2024 ஆகிய நாள்களில் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளன. இதில் அரசுத் துறை/வாரியம்/ தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் உதவியாளர்/இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் ஆகிய நிலையில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News November 9, 2024

கடலூர் விசிக நிர்வாகிகள் நீக்கம்: திருமாவளவன் நடவடிக்கை

image

புவனகிரி மஞ்சகொல்லை கிராமத்தில் விசிக கொடி மற்றும் கொடி கம்பத்தை சேதப்படுத்தியது தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளான செல்லப்பன் மற்றும் செல்வி முருகன் ஆகியோர் காவல்துறை கண்டிக்கும் ஆவேசத்தில் கட்சியின் நன்மதிப்புக்கு ஊரு விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், இரு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததால் இருவரும் 3 மாதம் இடைநீக்கம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 2 நாட்களில் தமிழகம், இலங்கையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

கடலூர் மாவட்ட காவல்துறைக்கு பாமக நிறுவனர் கண்டனம்

image

அம்பேத்கர் சிலைகளை உடைக்க பாமக முயற்சி என கடலூர் மாவட்ட காவல்துறையினர் பொய்யை பரப்புவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே என்றும் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலை எங்கேனும் அவமதிக்கப்பட்டால் அதற்கான முதல் எதிர்ப்புக்குரல் வருவது என்னிடம் இருந்துதான் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

News November 8, 2024

கடலூரில் தாய் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

image

கடலூர் புதுக்குப்பம் எஸ்.ஆர். காலனியை சேர்ந்தவர் பாலாஜி மகள் சரண்யா (17). கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த சரண்யா இன்று செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது தாய் கல்பனா திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2024

கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் நவம்பர்-07 (வியாழன்), 08 (வெள்ளி) , 09 (சனி), 10 (ஞாயிறு), 12 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கூறியுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 6, 2024

பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

image

வன்முறையை ஏற்படுத்தும் விதமாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பாமக எடுக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!