India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நவம்பர் 20-ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.
வடலூர் அருகே ஓனாங்குப்பம் செல்லும் சாலையில் சுண்ணாம்பு ஓடை உள்ளது. அந்த ஓடையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து மிதந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊர் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காட்டுமன்னார்குடி அடுத்த மேல்பருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலரான வீராசாமி (65) கடந்த 2012-ம் ஆண்டு தானே புயலில் பாதிக்கப்பட்ட அதேபகுதியை சேர்ந்த ஆசைதம்பி என்பவருக்கு புயல் நிவாரண தொகை வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வீராசாமிக்கு இன்று கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் சிறப்பு நீதிபதி நாகராஜன், 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள தரைப்பாலம் கடலூர் மற்றும் பாண்டிச்சேரியை இணைக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரத்து வருவதால் தரை பாலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர் அதே பகுதியை சேர்ந்த அனிதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த அருளை அனிதாவின் தந்தை சக்திவேல், தாய் ராஜகுமாரி மற்றும் உறவினர்கள் அருணை தாக்கிவிட்டு மகள் அனிதாவை கடத்தி சென்றனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர் மாவட்டத்திற்கு வரும் 24.11.2024 மற்றும் 25.11.2024 ஆகிய நாட் களில் ஆய்வு கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வர உள்ளார். இதனை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
01-01-2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவைகளை மேற்கொள்ள நாளை (16.11.2024) மற்றும் 17.11.2024 (ஞாயிறு), 23.11.2024 (சனி) மற்றும் 24.11.2024 (ஞாயிறு) ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.,15) காலை நிலவரப்படி, கலெக்ட்ரேட்டில் 56.8 மில்லி மீட்டர், கடலூர் 44.8 மி.மீ, லால்பேட்டை 9 மி.மீ, தொழுதூர் 9 மி.மீ, குப்பநத்தம் 8.4 மி.மீ, மே.மாத்தூர் 7 மி.மீ, லக்கூர் 5.4 மி.மீ மற்றும் கீழ்ச்செருவாயில் 3.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் பிறந்து 15 ஆண்டுகள் ஆன குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறாதவர்கள் தற்போது அரசு அறிவித்திருக்கும் பிறப்பு இறப்பு விதிகளை திருத்தி 1-1-2020 முதல் டிச.31ஆம் தேதி வரை 5 ஆண்டுகள் பதிந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. வரும் டிச. 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதை பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தியுள்ளது.
குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, கேப்பர் மலை, கொர்ணாபட்டு, தொழுதூர், தோப்புக்கொல்லை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (16/11/2024) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, குண்டியமல்லூர், சேரகுப்பம், கொல்லக்குடி, ஆர்என் புரம் உள்ளிட்ட பிற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.