Cuddalore

News November 24, 2024

காட்டுமன்னார்கோவில் அருகே பெண் தற்கொலை

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆழங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன் மனைவி திரிபுரசுந்தரி (50). செல்லையன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், கடன் சுமை அதிகமாக இருந்ததாலும் திரிபுரசுந்தரி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று திரிபுரசுந்தரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2024

கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

கடலூர் மாவட்டம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு சென்னை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News November 22, 2024

கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவ.25 (திங்கள்) முதல் நவ.28 (வியாழன்) வரை கடலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

News November 22, 2024

சிதம்பரத்தில் இருவர் கைது

image

சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் வடகிருப்பை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் இரு தினங்களுக்கு முன்பு இரவு அண்ணாமலை நகர் திருவக்களம் சந்தை பழம் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மெயின் ரோடு தெருவை சேர்ந்த முருகானந்தம் கோபால் இருவரும் முன்விரோத காரணமாக ரஞ்சித் குமாரை நேற்று தாக்கியுள்ளனர். ரஞ்சித் குமார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து முருகானந்தம் கோபால் இருவரையும் கைது செய்தனர்.

News November 22, 2024

வீராணம் ஏரியின் ஷட்டரில் திடீர் உடைப்பு

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த வீராணம் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீராணம் ஏரியின் ஷட்டர் திடீரென உடைந்தது. இதுபற்றி அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க ஜேசிபி மூலம் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

News November 21, 2024

கடலூர்:அம்பேத்கர் விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக அரிய தொண்டு செய்தவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் அரசு விருது பெற www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 25.11.2024-க்குள் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News November 21, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

மழை மற்றும் புயல் காரணமாக நீண்ட நாட்களாக பராமரிப்பில்லாத விளம்பர பதாகைகள் கீழே விழுந்து விபத்தினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அனுமதியின்றி விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் விளம்பர பதாகைகள் வைப்பவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

கடலூரில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் கடலூர் மாவட்டத்திலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 19, 2024

நெல் விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய 15.11.2024 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநில அரசு, மத்திய அரசை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் அளித்திட கோரிக்கை விடுத்தது. அதன்படி சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு கால அவகாசத்தினை 30.11.2024 வரை நீடிப்பு செய்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News November 19, 2024

பண்ருட்டியில் நாளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (நவம்பர் 20-ம் தேதி) ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

error: Content is protected !!